மீண்டும் இணைந்த அஸ்வின்- லாஸ்லியா ஜோடி. யூடுயூப்ல தெறிக்க போது. வெளியான புகைப்படம் இதோ.

0
744
aswin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது. இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரை குறித்து காதல் கிசுகிசு சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா காதல் குறித்து பல கிசுகிசுக்கள் வந்தது. இருந்தும் இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதல் என்ன ஆனது? என்று இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதற்கு பிறகு லாஸ்லியாவின் தந்தை இழப்பு. இது லாஸ்லியாவுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இருந்தும் எல்லா துயரங்களையும் கடந்து லாஸ்லியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் லாஸ்லியா படங்களில் கமிட்டாகி வருகிறார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

- Advertisement -

லாஸ்லியா நடித்த படங்கள்:

அவர் சொன்னதை தொடர்ந்து பிக் பாஸ்க்கு பின்னர் முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா கமிட்டானார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், ஆரியுடனான படத்திற்கு முன்பாகவே ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இந்த படத்தை இயக்கி உள்ளனர். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ், அர்ஜுன் உள்பட பல சிங், நடித்துள்ளார்கள்.

லாஸ்லியா நடிக்கும் படங்கள்:

இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தும் லாஸ்லியாவின் முதல் திரைப்படம் வெற்றி படமாக அமைய வில்லை. இருப்பினும் இவர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது லாஸ்லியா அவர்கள் ஆல்பம் பாடலுக்கு நடனமாடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

அஸ்வின் திரைப்பயணம்:

நடிகர் அஸ்வின் உடன் தான் லாஸ்லியா சேர்ந்து நடனமாடியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இவர் இதற்கு முன்பே சின்னத்திரை சீரியல்கள், படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியதுகுக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ஆல்பம் சாங், வெப்சீரிஸ் என்று பிசியாக நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் என்ன சொல்லப்போகிறார் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. ரசிகர் மத்தியில் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

அஸ்வின்- லாஸ்லியா ஆல்பம் பாடல்:

இதனை தொடர்ந்து தற்போது அஸ்வின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து sugar baby என்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார்கள். தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு இவர்களுடைய இந்த பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும், இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் லாஸ்லியா, அஸ்வின் இருவரும் ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்து இருக்கிறார்கள். Blesso Beauty soap என்ற விளம்பரத்தில் இருவருமே நடித்திருந்தார்கள். இது தான் லாஸ்லியாவின் முதல் விளம்பரம் என்பது குறிபிடத்தக்கது. தற்போது மீண்டும் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஆல்பம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கவின் இல்லை இனிமேல் அஸ்வின் தான் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement