கவின் விஷயத்தில் சாக்க்ஷிகும் லாஸ்லியாவிற்கும் வெடித்த சண்டை.!

0
3025
Losliya-Sakshi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே கவின் தான் பெண்கள் விஷயத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதிலும் லாஸ்லியா மற்றும் சாக்க்ஷி விஷயத்தில் கடந்த சில நாட்களாகவே பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அதிலும் கவின் விஷயத்தில் தற்போது சாக்க்ஷி மற்றும் லாஸ்லியாவிற்கு ஒரு பணிப்போரே நடந்து வருகிறது.

-விளம்பரம்-

- Advertisement -

கடந்த சில நாட்களாகவே சாக்க்ஷியிடம் பேசாமல் இருந்து வருகிறார் லாஸ்லியா. இந்த நிலையில் போட்டியாளர்களுக்கு லக்ஸரி பட்ஜெட்டிற்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதே போல இன்றைய டாஸ்கில் போட்டியாளர்களுக்கு மொட்டை கடுதாசி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : மகள்களுடன் கமல் பதிவிட்ட புகைப்படம்.! தரக்குறைவாக பேசிய ரசிகருக்கு சின்மயின் பதில்.! 

இந்த நிலையில் சாக்க்ஷியிடம் கவின் குறித்து கேட்கப்பட்டிருந்தார். அப்போது பேசிய சாக்க்ஷி, எனக்கு கவினிடம் உணர்வுகள் இருந்தது உண்மை தான். ஆனால், அவர் கொஞ்ச நாட்களாகவே அவன் என் முன்னிடையே வேறு ஒரு பெண்ணின் கையை பிடித்து நடந்து சென்றதை பார்க்கும் போது எனக்கு கஷ்டமாக இருந்தது லாஸ்லியாவை மறைமுகமாக தாக்கினார்.

-விளம்பரம்-

இதனால் கடுப்பான லாஸ்லியா எனக்கும் கவினுக்கும் இருப்பது நட்பு மட்டும் தான், அதை நான் யாரும் தனியாக கூப்பிட்டு சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. நான் அவர் கையை பிடித்து நடப்பது தவறு இல்லை. நான் தர்ஷனிடம் பழகுவது எப்படி கவினிடம் பழகுவது எப்படி என்பது தெரியும். எனக்கு கவினை பிடிக்கும் அவர் என் நண்பர் மட்டும் தான் என்று கூறினார்.

இதனால் கடுப்பான சாக்க்ஷி, நான் உன்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை, உனக்கு கேள்வி வந்தால் மட்டும் தான் நீ பேச வேண்டும் என்று கூற, கோபமடைந்த லாஸ்லியா உங்ககிட்ட தனியா பேச விருப்பம் இல்ல அதனால் தான் நான் அனைவர் முன்பும் சொன்னேன் என்று கோபமாக எழுந்து சென்று விட்டார்.

Advertisement