கவினுக்காக சாண்டியிடம் வக்காலத்து வாங்கும் லாஸ்லியா.! பிரிந்ததா பாய்ஸ் கேங்.!

0
6665
losliya-sandy
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு டாஸ்ககுகளை போட்டியாளர்கள் நிறைவு செய்துள்ள நிலையில் தர்ஷன் இந்த டாஸ்கில் முதல் இடத்தில இருக்கிறார். கடந்த திங்கள் கிழமை நடத்தப்பட்ட டாஸ்கில் சுதப்பிய கவின் இரண்டு நாட்களாக சிறப்பாக விளையாடி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கை பெற போட்டியாளர்கள் கடுமையாக போராடி வருவதால் இனி வரும் நாட்களில் டாஸ்குகள் கடுமையாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இருப்பினும் கடந்த இரண்டு சீசன்களில் நடத்தப்பட்ட பினாலே டாஸ்க் போல தற்போது நடத்தப்பட்டு வரும் பினாலே டாஸ்க் இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

கடந்த சில நாட்களாக கவின், லாஸ்லியாவை விட்டு விட்டு ஷெரினிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார். இதனால் கவின் இனி லாஸ்லியா பக்கம் திரும்ப மாட்டார் என்று பலரும் நினைத்து வந்தனர். ஆனால், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஒரு டாஸ்கின் போது லாஸலியாவை சாண்டி தள்ளிவிட , கடுப்பான கவின், சாண்டியிடம் வாக்கு வாதம் செய்தார்.

அதன் பின்னர் சாண்டியும் கவினும் சமாதானம் ஆகினர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் சாண்டியிடன் பேசும் லாஸ்லியா, கவினுக்காக விட்டு கொடுக்க கேட்கிறார். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருவதையெல்லாம் பார்க்கும் போது இதுவரை ஒற்றுமையாக இருந்த பாய்ஸ் கேங் இனி சிதறிவிடுமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தற்போது நடைபெற்று வரும் ஒட்டிங்கில் வழக்கம் போல கவினுக்கு தான் அதிகபடியான வாக்குகள் விழுந்து வருகிறது. மேலும், ஷெரீனுக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement