பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தமிழக இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் லாஸ்லியா தான். பரீட்சயமில்லாத போதும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார் லாஸ்லியா தான். இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்.
https://twitter.com/LosliyaArmy/status/1148579739575017473
லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் போஸ்.! ஜோடி சுனிதாவா இப்படி.!
ஏற்கனவே, லாஸ்லியாவின் பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. அதே போல இவரது ஆர்மிகளும் இவரது அப்டேட்டுகளை தவறாமல் வெளியிட்டு வருகின்றனர். மேலும், லாஸ்லியாவின் வீடியோகளை மட்டும் கட் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.
லாஸ்லியாவிற்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறு அர்மிக்கள் இருப்பது தெரியும். இந்த நிலையில் லாஸ்லியாவின் ரசிகர்கள் லாஸ்லியாவிற்கு பேனர் எல்லாம் அமைத்து அதன் முன்னே பாலபிஷேகம் செய்து மேல தாளத்துடன் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.




