விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக தான் தனது பயணத்தை தொடங்கினார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பையும், ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு சூப்பர் ஹிட் ஆனதே கவின்– லாஸ்லியா காதல் தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும், லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பிரபலமான வீரர் ஹர்பஜன் சிங். இவர் கிரிக்கெட் தவிர சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர்.
இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் லாஸ்லியாவின் லுக் எப்படி இருக்க போகிறது என்று பலரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
https://www.instagram.com/p/CBDNUiuJgBElGJJ82n1hlkprLeiddghu2HR6LY0
தற்போது இந்த மோஷன் போஸ்டர் புகைப்படம் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. லாஸ்லியாவை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து லாஸ்லியா இயக்குனர் ஆல்பர்ட் ராஜா இயக்கும் புது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் ஆரி, சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். அதே போல் நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங்க் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.





