2019 ஆம் ஆண்டில் அதிக பிரபலமடைந்த தங்களது டாப் 10 ட்விட்டர் பதிவுகளை வெளியிட்ட விஜய் டிவி. லாஸ்லியா அப்பாவும் இருக்கார்.

0
16755
vijay-los
- Advertisement -

கோலிவுட் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் பல பிரபலமான நடிகர்கள் எல்லாரும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்கள் தான். காமெடி ஆக்டர் சந்தானம் தொடங்கி, கோலிவுட் ஸ்டார் சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த், ரியோ ராஜ், பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் விஜய் டெலிவிஷன் மூலம் தான் வெள்ளித்திரைக்கு வந்தவர்கள். இவர்கள் அனைவரும் விஜய் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு நிகழ்ச்சிகளிலும், சீரியலிலும் நடித்து அதன் மூலம் தான் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு சென்றார்கள். தற்போது ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டி.ஆர்.பி. ரேட்டுக்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பல சூப்பர் ஹிட் சீரியல்களையும், பிரம்மிக்க வைக்கும் நிகழ்ச்சிகளையும் தந்து வருகிறது.

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் டாப் சேனல்களில் ஒன்றாகவும் விஜய் டெலிவிஷன் திகழ்ந்து வருகிறது. வித்தியாசமான முயற்சிகளில் நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தை அடிச்சுக்க முடியாது என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க ஒளிபரப்பாகி மிகப்பிரபலம் அடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் ஒளிபரப்பு செய்தது நம்ம விஜய் டெலிவிஷன் தான். விஜய் டெலிவிஷன் பிக் பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்களாக ஒளிபரப்பு செய்து வருகின்றது. இந்த மூன்று சீசன்களையும் நம் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி உள்ளார்.

இதையும் பாருங்க : புத்தாண்டு நாள் அன்னிக்கு நடிகர் சந்தானம் எங்க போனாரு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

தற்போது விஜய் டெலிவிஷனில் இந்த வருடம் அதாவது 2019 ஆண்டு ஓளிபரப்பப்பட்ட போஸ்ட், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்து லைக் செய்து பிரபலமான டாப் 15 இடம் பிடித்த பல விஷயங்களை தெரிவித்து உள்ளார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் சின்ன சின்ன மூமெண்ட் மூலம் மக்களிடையே அதிக பிரபலமான விஷயங்களை தற்போது இந்த ஆண்டின் இறுதியில் ஒளிபரப்பு செய்துள்ளார்கள். அதில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது, பிக் பாஸ் சீசன்3ன் ’82 வது நாள் புரோமோ’ அதாவது சாண்டி, லாலாவை சந்திக்கும் வீடியோ எடுத்து டுவிட்டரில் பத்தாயிரத்துக்கும் மேல் லைக் பதிவானது.

நான்காவது இடத்தை பிக் பாஸ் சீசன் 3ன் நூறாவது நாள் கொண்டாட்டத்தில் முகென் பாடிய ‘சத்தியமா நான் சொல்லூரண்டி’ பாட்டு தான். அதில் விஜய் டிவி சிங்கர் எல்லாம் கலந்து கொண்டு பாடினார்கள். இது 11,000 லைக்கு மேல் ட்விட்டரில் பதிவானது. மூன்றாவது இடத்தை உலகநாயகன் கமலஹாசன் தான் பிடித்துள்ளார் இவர் பிக் பாஸ் சீசன் 3 புரோமோசன் வீடியோ. இதற்கு இரண்டாயிரத்துக்கும் மேல் லைக்குகள் வந்தது. அடுத்தது இரண்டாவது இடத்தில் விஜய் டெலிவிஷன் 2019ஆம் ஆண்டு விஜய்யின் பிறந்தநாள் போஸ்டரை ஜூன் 22ஆம் தேதி பதிவிட்டு இருந்தார்கள். இது 16,000 க்கும் மேல் ட்விட்டரில் பதிவானது.

-விளம்பரம்-

முதலிடத்தில் பிக் பாஸ் சீசன் 3 வின்னர் என்று அறிவிக்கும் போது முகென் கையில் ட்ரோபி இருந்த போஸ்டர். இந்த போஸ்டர் 20 ஆயிரத்துக்கும் மேல் லைக்குகள் வாங்கியது. ஒன்பதாவது இடத்தில் லாஸ்லியா அப்பா பிக்பாஸ் வீட்டுக்கு வந்தது. 12வது இடத்தில் கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போகும் போது, அதுக்கப்புறம் சீமான் பர்த்டே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பர்த்டே என பத்தாவது இடத்தில் பிடித்து உள்ளார்கள். இப்படி இந்த வருடம் இவர்களுடைய வீடியோ மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அதிக லைக்ஸ்களை தட்டிச் சென்றது.

Advertisement