பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கு வந்து ஆரிக்கு வாழ்த்து சொல்லியுள்ள லாஸ்லியா – வைரலாகும் வீடியோ.

0
15902
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

அதே போல இறுதி போட்டிக்கு ஒரு சில நாள் மட்டுமே இருந்த நிலையில் கேப்ரில்லா 5 லட்சத்தை எடுத்துகொன்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் இருந்த நிலையில் ரம்யா மற்றும் சோம் வெளியேற்றப்பட்டனர். இறுதியில் ரியோ மூன்றாம் இடத்தையும் பாலாஜி இரண்டாம் இடத்தையும் ஆரி முதல் இடத்தையும் பிடித்தார்.

இதையும் பாருங்க : கல்லூரி கட்டணத்தை செலுத்த இப்படி போஸ் கொடுக்க ஆரம்பித்தேன் – அபிராமி பகிர்ந்த Throwback புகைப்படம்.

- Advertisement -

முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார் ஆரி.

ஆரியின் வெற்றியை சனம் மற்றும் அனிதாவை தவிர வெறும் யாரும் அவ்வளவாக கொண்டாடவில்லை. இப்படி ஒரு நிலையில் நேற்று பிக் பாஸ் நிறைவு நாள் கொண்டாட்டத்தில் லாஸ்லியா கலந்து கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் லாஸ்லியாவின் தந்தை காலமாகி இருந்தார். அதில் இருந்து லாஸ்லியா எந்த நிகழ்ச்சியிலும் பங்குபெறாமல் இருந்த நிலையில் நேற்று பிக் பாஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்று ஆரி மற்றும் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். லாஸ்லியா தற்போது ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement