அபியை ஜெயிலுக்கு அனுப்ப சாண்டிக்கு, லாஸ்லியா கொடுத்த சிக்னல நோட் பண்ணீங்களா.! என்ன ஒரு தந்திரம்.!

0
38223
losliya
- Advertisement -

கடந்த சில வாரமாக மிகவும் சலிப்பாக போய்க்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற பிறகு மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மேலும், இந்த வாரம் போட்டியாளர் அனைவர்க்கும் லக்ஸ்சரி பட்ஜட்டிற்கான டாஸ்க் ஒன்றும் கொடுக்கப்பட்டது. இதில் வனிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

-விளம்பரம்-

இந்த டாஸ்கில் பிக் பாஸ் வீடு ஹோட்டலாக மாறியது, மேலும் போட்டியாளர்களில் சேரன் மேனஜராகவும், மற்ற போட்டியாளர்கள் அனைவரும் பணியாளர்களாகும், பொழுது போக்காளர்களாகவும் நடித்து வந்தனர். இந்த டாஸ்கில் மற்ற போட்டியாளர்கள் அனைவரையும் வச்சி செய்தார் வனிதா.

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் யார் சிறந்த பர்பாமெர் யார் மோசமான பரப்பாமர் என்று முடிவு செய்தனர். இதில் சிறந்த போட்டியாளராக ஷெரின், தர்ஷன், மதுமிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், யார் இந்த டாஸ்கை சுவாரசியமாக செய்யவில்லை என்று விவாதம் எழுந்த போது சேரன், லாஸ்லியாவின் பெயரை கூறினார். அப்போது அபிராமி அருகில் அமர்ந்து கொண்டிருந்த லாஸ்லியா கண்ணை சிக்னல் செய்ய உடனே கவின் அபிராமியின் பெயரை குறிப்பிட தொடங்கினர்.

-விளம்பரம்-

இதிலிருந்தே அபிராமியின் பெயரை கூற லாஸ்லியா மற்றும் சாண்டி கேங் முடிவு செய்து விட்டார்கள் என்றே தெரிந்தது. ஆனால், அபிராமியிடம் நெருங்கிய தோழியாக இருக்கும் லாஸ்லியாவே அவரை இப்படி முதுகுக்கு பின்னால் குத்துவது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.

Advertisement