வெளியில் வந்ததும் லாஸ்லியாவிற்கு திரைப்பட வாய்ப்பு.! பிரபல இயக்குனரே சொல்லிட்டாரே.!

0
2674
losliya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு கண்டிப்பாக சினிமா வாய்ப்பு கிடைத்து விடும். அந்த வகையில் பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீஸனில் பங்கு பெற்றுள்ள லாஸ்லியாவிற்கும் விரைவில் சினிமா வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

-விளம்பரம்-

- Advertisement -

செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா தற்போது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் பல்வேறு ஆதரவுகள் இருந்து வந்தன. ஆனால், சமீப காலமாக இவர் செய்து வரும் செயல்களால் கொஞ்சம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் .இந்த நிலையில் பிரபல இயக்குனர் லாஸ்லியாவின் நேற்று மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை தெரிவித்திருந்தார்.

இதையும் பாருங்க : இப்போ போய் இவர எல்லாரும் நாமினேட் செய்றாங்க.! இதுக்கு அந்த மூட்ட கூடோன்லே இருந்திருக்கலாமே.! 

நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் அவரவர் குருநாதர்கள் கால் செய்தனர். அந்த வகையில் இயக்குனர் சேரனுக்கு பிரபல இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் கால் செய்து இருந்தார். அப்போது அவர் பேசுகையில் சேரன் தன்னிடம் துணை இயக்குனராகவும் நல்ல சீடராக இருந்தார் என்றும் பேசி இருந்தால் அதன் பின்னர் மற்ற போட்டியாளர்களை பற்றியும் பேசி இருந்தார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

-விளம்பரம்-

அப்போது லாஸ்லியா விடம் பேசிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் உங்களுக்காக திரையுலகம் வாய்ப்பு தர காத்துக்கொண்டிருக்கிறது இவ்வளவுதான் நான் இப்போதைக்கு கூறுவேன். இப்போது வேண்டுமானால் நீங்கள் லாஸ்லியா வாக இருக்கலாம் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியே வரும்போது கெயின்லியாவாக (gainலியா)வெளியே வருவீர்கள் என்றும் கூறியிருந்தார். இதிலிருந்தே லாஸ்லியா விற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இவ்வளவு பெரிய இயக்குனரே சொல்லிவிட்டாரே.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement