சென்னை திரும்பிய லாஸ்லியா. ட்ரெண்டிங்கில் வந்த ஹேஷ் டேக். அப்படி என்ன அது.

By Rajkumar · 3/11/2019

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத ஒரு சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் லாஸ்லியா மிகவும் முக்கியமான நபர் ஆவார். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, தனது நண்பர் ஒருவர் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார்.

https://twitter.com/iam_Losliya/status/1190897929893990401

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த ஒரே நாளில் இவருக்கு சமூக வலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கல் கூட உருவானது இதற்கு முக்கிய காரணமே இவரது க்யூட்டான தோற்றம் என்றே கூறலாம். ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் பட்டாம்பூச்சி போல சுற்றித்திரிந்த லாஸ்லியா பின்னர் கவின் மீது காதல் வயப்பட்டார். சொல்லப்போனால் இந்த பிக்பாஸ் சீசன் முழுக்க கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதைதான் ஓடிக்கொண்டு இருந்தது. இவர்கள் இருவருக்கும் சமூகவலைதளத்தில் எக்கச்சக்க ஆர்மி கூட உருவானது. இதனால்தான் லாஸ்லியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதற்கு ஒரு முக்கிய காரணமாகாவும் பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க : உள்ளாடை தெரியும்படி படு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட ‘மெகா’ நடிகை ஸ்ரிஷ்டி.

லாஸ்லியா விஷயத்தில் அவரது தந்தை கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொண்டார். இருப்பினும் இறுதிவரை கவின் உடனான உறவை துண்டிக்காமல் இருந்து வந்தார் லாஸ்லியா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர்கள் இருவரும் இதுவரை ஏன் சந்திக்கவில்லை என்று ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருந்து வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தான் முதல் பட்டத்தை வெல்வார் என்று இவரது ரசிங்கர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வந்தார்கள். ஆனால், இவருக்கோ இரண்டாம் இடம் கூட கிடைக்கவில்லை. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய லாஸ்லியாவிற்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து அன்பை பொழிந்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவரும் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அள்ளி வீசி வருகின்றனர். ஆனால், அதே போல இந்த சீசனில் பங்குபெற்ற சாண்டி, கவின், லாஸ்லியா மூவருமே இதுவரை எந்த பேட்டியிலும் பங்குபெறவில்லை. இருப்பினும் லாஸ்லியாவிற்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி லாஸ்லியா மற்றும் கவின் இருவரையும் குறிப்பிட்டு பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் லாஸ்லியாவின் #Kollywoodawaitslosliya என்ற ஹேஷ் டேக் ஒன்று சமீபத்தில் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்தது. லாஸ்லியாவை விரைவில் தமிழ் சினிமாவில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு ஹேஷ் டேக்கை உருவாக்கியுள்ளனர். மேலும், சமீபத்தில் தான் லாஸ்லியா இலங்கையில் இருந்து லாஸ்லியா வந்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full