அடுத்த படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ள லாஸ்லியா – ஹீரோ இவர் தானாம். அதிகாரபூர்வ அறிவிப்பு.

0
3836
losliya
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக தான் தனது பயணத்தை தொடங்கினார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பையும், ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு சூப்பர் ஹிட் ஆனதே கவின்– லாஸ்லியா காதல் தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பிரபலமான வீரர் ஹர்பஜன் சிங். இவர் கிரிக்கெட் தவிர சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் கூட வெளியாகி இருந்தது. ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து வரும் லாஸ்லியா தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

லாஸ்லியா கதாநாயகியாக கமிட் ஆகியுள்ள இந்த படத்தினை Axess film factory என்ற நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக புதுமுக நடிகர் பூரானேஷ் என்பவர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெ எம் ராஜா சரவணன் என்பவர் இயக்க இருக்கிறார். இவரும் புது முக இயக்குனர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement