'ஊர் ஓரம் புளியமரம்' - டான்ஸ் வீடியோவை பகிர்ந்த லாஸ்லியாவை கலாய்க்கும் நெட்சன்கள்.

By Rajkumar · 15/9/2021

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ புது முகங்களுக்கு தமிழ் சினிமாவில் பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு பரிச்சயமில்லாத முகங்கள் கலந்து கொண்டார்கள். இதில் தர்ஷன் முகேன், லாஸ்லியா போன்ற பலரும் ரசிகர்களுக்கு புதுமுகமாக தான் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மூவருக்குமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது.

https://twitter.com/october_vibe/status/1437963315062341632

அதிலும் குறிப்பாக லாஸ்லியாவின் புகழ் கொடிகட்டி பறந்து வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்குபெற்ற முகேன் மற்றும் தரிசனை விட லாஸ்லியா தான் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டானார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கமிட்டாகி இருந்தார்.

இதையும் பாருங்க : இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கள - தமிழ் சினிமாவின் Underrated காமெடியன் மாறன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் என்று அடுத்தடுத்து வெளியாக இருந்தது. இந்த இரண்டு படங்களும் வெளிவராத நிலையில் லாஸ்லியா அடுத்த படத்தில் கமிட்டாகி இருந்தார். லாஸ்லியா கதாநாயகியாக கமிட் ஆகியுள்ள இந்த படத்தினை Axess film factory என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், இந்த படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக புதுமுக நடிகர் பூரானேஷ் என்பவர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெ எம் ராஜா சரவணன் என்பவர் இயக்க இருக்கிறார். இவரும் புது முக இயக்குனர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இவர் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.

இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படி படங்களில் பிசியாக நடித்து வரும் லாஸ்லியா, பிபி ஜோடிகள் நிகழ்ச்சி இறுதி போட்டியில் நடனமாட இருக்கிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலர் கேலி செய்த நிலையில் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full