இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கள – தமிழ் சினிமாவின் Underrated காமெடியன் மாறன்.

0
11239
maaran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நுழைந்து தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களிடையே பிரபலமானார். இவருடைய நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் வேற லெவல். காமெடியனாக திரையுலகில் கால் பதித்த சந்தானம் அவர்கள் தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இயக்குனர் கார்த்தி யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அர்பஜன் சிங், யோகி பாபு, அனகா, ஸ்ரீரின், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இதையும் பாருங்க : இன்ஸ்டாவில் பதிவிட்ட அந்த வீடியோவால் வந்தது தான் இந்த வாய்ப்பு – சர்வைவர் ஷோவில் இளசுகளின் கிரஷ் ஐஸ்வர்யா

- Advertisement -

மேலும், இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் சந்தானம் மாற்றுத்திறனாளி ஒருவரை கிண்டல் செய்து பேசிய வசனம் குறித்து சோஷியல் மீடியாவில் பலரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து தன் படங்களில் சந்தானம் இதுபோன்று body shaming வசனங்களை பேசி வருவது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும் விமர்சனத்தையும் தந்து வருகிறது.

இந்த நிலையில் டிக்கிலோனா படத்தில் நகைச்சுவை நடிகர் மாறன் நடித்துள்ளார். இவர் வரும் காட்சிகள் மட்டுமே படத்தில் நகைச்சுவையாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், படத்தில் இவரது காட்சிகள் அதிகம் வைத்து இருந்தால் படத்தில் காமெடி இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

நடிகர் மாறனை லொள்ளு சபா இயக்குனர் தான் அதிக படங்களில் பயன்படுத்தி வருகிறார். ஆனால், இவருக்கு பெரும்பாலான படங்களின் வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இதானாலேயே இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. இனியாவது இவரை பல இயக்குனர்கள் சரியாக பயன்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் இறந்துவிட்டதாக கூட செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கில்லி மாறன் கொரோனாவால் காலமானார். இவர் பெயரும் மாறன் என்பதால் அவருக்கு பதிலாக இவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

Advertisement