ஸ்லிம் உடல், படு மாடர்ன் லுக் – ரசிகர்களை வியக்க வைத்த லாஸ்லியாவின் Transformationக்கு காரணமே இந்த நடிகை தான்.

0
838
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தமிழக இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரை குறித்து காதல் கிசுகிசு சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா காதல் குறித்து பல கிசுகிசுக்கள் வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.இருந்தும் இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதல் என்ன ஆனது? என்று குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு கவின் விளக்கம் கொடுத்து இருந்தார்.

- Advertisement -

ரவிக்குமார் சொன்ன தெய்வ வாக்கு :

அதில் அவர் நான் சிங்கிள் தான், எனக்கான காதலை தேடி கொண்டு இருக்கிறேன், கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். இதன் மூலம் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பது உறுதி ஆகி விட்டது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்பு :

அவர் சொன்னதை தொடர்ந்து பிக் பாஸ்க்கு பின்னர் முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா கமிட்டானார். அதன் பின்னர் இவர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், ஆரியுடனான படத்திற்கு முன்பாகவே ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

தோலிவியடைந்த முதல் படம் :

ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘கூகுள் குட்டப்பன்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். மலையாளத்தில் ‘ஆண்ட்ரியட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியான இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், தமிழில் இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது.

மாற்றத்திற்கு காரணம் :

தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியா சமீபகாலமாக படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். அதோடு பிக் பாஸில் இருந்த லாஸ்லியாவிற்கும் ஏகப்பட்ட வித்யாசம். சமீப காலமாக லாஸ்லியாவின் காஸ்டியூம்ஸ் எல்லாம் வேற லெவலில் இருந்து வருகிறது. லாஸ்லியாவின் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமே நடிகை மாதுரி ஜெயின் தான். அவருடன் சேர்ந்த பின்னர் தான் லாஸ்லியா தனது தோற்றம் மற்றும் லுக்கையே மாற்றினார். மாதுரி ஜெயின் வேறு யாரும் இல்லை ஹிப் ஹாப் ஆதி நடித்த சிவகுமாரின் சபதம் படத்தில் நடித்த நாயகி தான்.

Advertisement