லாஸ்லியாவின் தந்தையின் இறப்பில் சந்தேகமா ? போஸ்மாடர்ம் ஆதாரங்களை வெளியிட்ட உறவினர். வைரல் வீடியோ.

0
12684
- Advertisement -

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் முகேன், தர்ஷன், லாஸ்லியா என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அதில் மிகவும் பிரபலமடைந்தது என்னவோ லாஸ்லியா தான். இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட 24 மணி நேரத்திலேயே இவருக்கென்று பல ஆர்மி கூட துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் தான் மிகவும் லைட் ஆக இருந்து வந்தது.

-விளம்பரம்-

கவின் லாஸ்லியா இருவரும் பிக் பாஸ் வீட்டில் காதலிதது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இருவருமே தங்கள் காதலை வெளிபடையாக கூறவில்லை எது வேண்டுமானாலும் வெளியில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று கவின் அடிக்கடி கூறி வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்தது . கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் freeze டாஸ்க்கின் போது லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள்சென்று இருந்தார்.

- Advertisement -

10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுதார் லாஸ்லியா. இப்படி ஒரு நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இரவு கனடா நாட்டில் இவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இதனால் லாஸ்லியவிற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். அதே போல லாஸ்லியாவின் தந்தை இறந்த பின்னர் அவர் படுக்கை அறையில் சடலமாக கிடந்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும், லாஸ்லியாவின் தந்தையின் மரணம் கொலையா தற்கொலையா என்றெல்லாம் கூட சர்ச்சைகள் கிளம்பியது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாறியநேசனின் மைத்துனர், லாஸ்லியாவின் தந்தை இறப்பில் சமூக வலைத்தளத்தில் உண்மைக்குப் புறம்பான பல செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. அவர் இயற்கையான முறையில் தான் மரணித்தார் என்பதற்கான போஸ்ட்மார்டம் ஆதாரங்கள் இருக்கிறது. எனவே உண்மைக்குப் புறம்பான செய்திகளை யாரும் எழுத வேண்டாம். அதேபோல மக்களாகிய நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பாமல் லாஸ்லியாவின் பெயரை அவமதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement