வாழ்க்கையில் எல்லாம் வந்து போகும் – வைரலாகும் லாஸ்லியா தந்தையின் வீடியோ.

0
1291
losliya
- Advertisement -

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் முகேன், தர்ஷன், லாஸ்லியா என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அதில் மிகவும் பிரபலமடைந்தது என்னவோ லாஸ்லியா தான். இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட 24 மணி நேரத்திலேயே இவருக்கென்று பல ஆர்மி கூட துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் மற்றும் லாஸ்லியாவின் காதல் தான் மிகவும் லைட் ஆக இருந்து வந்தது.

-விளம்பரம்-

கவின் லாஸ்லியா இருவரும் பிக் பாஸ் வீட்டில் காதலிதது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இருவருமே தங்கள் காதலை வெளிபடையாக கூறவில்லை எது வேண்டுமானாலும் வெளியில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று கவின் அடிக்கடி கூறி வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்தது . கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் freeze டாஸ்க்கின் போது லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள்சென்று இருந்தார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுதார் லாஸ்லியா.

- Advertisement -

ஆனால், ககவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாடுங்கள் என்று அறிவுரை கூறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் லாஸ்லியாவின் தந்தை. இதனாலேயே இவரை கவின் ரசிகர்களுக்கும் பிடித்து இருந்தது.

இப்படி ஒரு நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டில் சென்ற போது கவனிடம் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், கவினை அழைத்து கட்டியணைத்து பேசிய மரியநேசன், டோன்ட் வொர்ரி.. வாழ்க்கையில எல்லாம் வந்து போகும்.. எல்லாம் ரெடி பண்ணி ரெடியா வாங்க என்று ஆறுதல் கூறி உள்ளார். இந்த விடீயோவை கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement