பிக் பாஸ் நடிகை லாஸ்லியாவின் தந்தை மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி.

0
1129
- Advertisement -

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாகவெடித்தது . கவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார்.லாஸ்லியாவின் தந்தை ,மட்டுமல்ல லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கூட, கவினிடம் நீ பழகுவதை நிறுத்து உன்னுடைய விளையாட்டை நீ விளையாடு என்று அறிவுறுத்தினார்.

-விளம்பரம்-
losliya-father

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் freeze டாஸ்க்கின் போது லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுதார் லாஸ்லியா. அதேபோல கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் அவரது தந்தை மிகுந்த வருத்தத்தில் இருந்தார். இருப்பினும் அவரிடம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாடுங்கள் என்று அறிவுரை கூறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் லாஸ்லியாவின் தந்தை.

- Advertisement -

இந்த ஆண்டு தந்தையர் தினத்தின் போது வீடியோ ஒன்றை வெளியிட்ட லாஸ்லியா, தந்தையர் தினத்தில் மட்டும் நமது தந்தைக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா என்று நினைப்போம். அவர்கள் நாம் வாழ்த்து தெரிவித்தால் அவர்கள் சந்தோச படுவார்கள். நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஆண்டு என் தந்தைக்கு வாழ்த்து தெரிவிக்க வில்லை. பின்னர் அவரே எனக்கு போன் செய்து என் எனக்கு யாருமே வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேட்டார். அவர் எனக்காக பல கஷ்டங்களை தாங்கி கொண்டு இருக்கிறார்.

அவர் கனடாவில் இருந்தாலும் அவருடைய சம்பாத்தியம் மிக குறைவு தான். ஆனால், மாச மாசம் எனக்கு செலவுக்கு காஸ் கொடுப்பார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு ஆன செலவை அவர் தான் பார்த்துக்கொண்டு இருந்தார். அதே போல அவர் எனக்காக பல தியாகங்களை செய்து உள்ளார். அவருக்கு நான் இப்போது செய்யும் வேலை கூட புடிக்கவில்லை. ஆனால், என்மேல வைத்திருக்கும் பாசத்திற்காக அவர் என்னை சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement