மங்காத்தா கவின், 96 லாஸ்லியா.! அடேய் எல்ல மீறி போறீங்க டா.!

0
15803
kavin-Los
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று துவங்கியது.

-விளம்பரம்-

இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர். நேற்றய நிகழ்ச்சியில் ஓபன் நாமினேஷன் என்பதால் பலரும் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தனர். அதிலும் சாக்க்ஷி கவினை நாமினேட் செய்ததால் லாஸ்லியா சாக்க்ஷியை நாமினேட் செய்தது தான் மேலும் ஒரு வியப்பாக இருந்தது.

இதையும் பாருங்க : என்னை மன்னியுங்கள்.! நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்ட சரவணன்.! 

- Advertisement -

இறுதியாக கவினை- 6 பேரும், மதுமிதாவை 5 பேரும், ரேஷிமாவை 4 பேரும் சாக்க்ஷியை 3 பேரும், அபிராமியை 2 பெரும் நாமினேட் செய்துள்ளனர். எனவே, இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சாக்க்ஷி, கவின், அபிராமி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர்

இந்த நிலையில் இந்த வார லக்சரி பட்ஜட்டிற்கான டாஸ்க் ஒன்று கொடுப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர் அனைவருக்கும் சினிமா ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் கவினுக்கு மங்காத்தா அஜித் கெட்டப்பும் லாஸ்லியாவிற்கு 96 திரிஷா கெட்டப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement