பெண்கள் தான் மோசமான எதிரிகள்.! குறும்படத்தை பகிர்ந்து மதுவிற்கு பதில் கூறியுள்ள காஜல்.!

0
11802
Madhumitha
- Advertisement -

ஆமை புகுந்த வீடு விளங்காது வனிதா புகுந்த வீடு வந்து இல்லாமல் இருக்காது என்பதை நிரூபிக்கும் விதமாக பிக்பாஸ் வீட்டில் வனிதா சிறப்பு விருந்தினராக சென்ற நாளில் இருந்தே சண்டையும் சர்ச்சையமாக தான் இருக்கிறது. சிறப்பு விருந்தினராக சென்ற நோக்கத்தை மறந்து விட்டு மற்ற போட்டியாளர்களின் பிரச்சினைகளை இழுத்துப்போட்டு பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார் வனிதா.

-விளம்பரம்-

- Advertisement -

வனிதாவால் முகேன் மற்றும் அபிராமி இடையே இருந்த உறவு வெடிகுண்டு வைத்த பாறை போல சிதறிவிட்டது. இது ஒருபுறமிருக்க நேற்றைய நிகழ்ச்சியில் மதுமிதா தேவையே இல்லாமல் பெண்கள் அடிமை படுத்தப்படுகிறார்கள் ஆண்கள் ஆதிக்கம் செய்கிறார்கள் என்றெல்லாம் தர்ஷன், கவின், சாண்டியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்

நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் யார் சிறந்த பர்பாமெர் யார் மோசமான பரப்பாமர் என்று முடிவு செய்தனர். இதில் சிறந்த போட்டியாளராக ஷெரின், தர்ஷன், மதுமிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், சுவாரஸ்யம் குறைவாக செய்தவர்கள் பெயரில் அபிராமியின் பெயரை தான் கவின் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், மதுமிதாவோ கவின் சொன்ன காரணத்தை ஏற்கவில்லை. இதனால் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது தர்ஷன், கவினை வா போகலாம் என்று அந்த இடத்தில் இருந்து இழுத்து சென்று விட்டார். அப்போது அமைதியாக இருந்த மதுமிதா, அதன் பின்னர் கவினிடம் சத்தம் போட்ட மது, இந்த வீட்டில் பெண்கள் அடிமைப்படுத்தபடுகிறார்கள், ஆண்கள் ஆதிக்கம் செலுத்து கிறார்கள் என்றெல்லாம் கூறியிருந்தார்.

இதனால் கடுப்பான கவின், சாண்டி இருவரும் தேவையில்லாமல் பேச வேண்டாம் என்று கூறினார்கள். இந்த நிலையில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் காஜல், உண்மையில் பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் பெண்களை எப்படி பார்க்கிறார்கள் என்ற ஒரு குறும்படம் ஒன்றை பகிர்ந்து, உண்மையில் பெண்கள் தான் மோசமான எதிரிகள் என்று பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement