நடிகர் மகத் அவர்கள் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு 2007 ஆம் ஆண்டு காளை என்ற திரைப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் தான் மகத் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் மோகன்லால் மற்றும் தளபதி விஜய் நடித்த ஜில்லா திரைப் படத்தின் தான் மூலம் மகத் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகர் மகத்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மகத் அவர்கள் மிக பெரிய அளவு பிரபலமானார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத்துக்கும், யாசிகாவுக்கும் இடையே நடந்த காதல் கலவரங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை எழுப்பியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் சினிமா உலகில் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் செய்வதை பாலோ செய்வதற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்கள் என்ன செய்தாலும் அப்படியே அவர்களைப் பாலோ செய்வது தான் ரசிகர்கள் வேலை. அது மட்டுமில்லாமல் அவர்கள் செய்வதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அப்படியே செய்வார்கள்.

இதையும் பாருங்க : தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் நடிகர் வடிவேலு தலைமறைவா ?

Advertisement

அதுவும் தனக்கு பிடித்த பிரபலம் என்று சொல்லி விட்டால் போதும் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு அதையே செய்ய வேண்டும் என்று யோசிக்கும் ஒரு கூட்டம் உள்ளது. இதனாலே சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பல நடிகர்கள் தங்களுடைய படத்தில் மது அருந்துவது, போதை பொருள் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மகத் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகரெட்டை தன் கையில் வைத்துக் கொண்டு இருப்பது போல ஒரு போட்டோ ஷுட் நடத்தி உள்ளார்.

அதில் ‘நான் சிகரெட் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் விட வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன். என்னால் விட முடியவில்லை. மேலும், அது ஒன்றும் நல்ல பழக்கம் இல்லை. நீங்கள் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தால் இந்தபழக்கத்தில் நீங்கள் நுழைந்து விடாதீர்கள் என்று பதிவிட்டிருந்தார். மேலும், #Saynotosmooking என்றும் டேக்கை பயன்படுத்தி இருந்தார். ஆனால், அந்த பதிவினை சிறிது நேரத்தில் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் மஹத்.

Advertisement

மேலும், இதே புகைப்படத்தை ட்விட்டர் பதிவிட்ட மஹத்திற்கு பிரபல நடிகரான பிரேம்ஜி புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று அட்வைஸ் செய்ததற்கு, அதற்கு முதலில் நீ நிறுத்தவேண்டும் மச்சான் நீ 15 வருடங்களாக புகை பிடித்து வருகிறாய் நான் புகைப்படத்திற்கு போஸ் மட்டும்தான் கொடுத்தேன். ஆனால், நீ நிஜத்தில் புகை பிடிக்கிறாய் அதனால் தயவு செய்து நீ புகைபிடிப்பதை நிறுத்து என்று பதிவு செய்திருக்கிறார். ஆனால், இதே மஹத் இன்ஸ்டாகிராமில் புகைப்பிடிப்பதை நிறுத்த முடியவில்லை என்று பதிவிட்டு இருந்த அந்த பதிவினை நீக்கிவிட்டார்.

Advertisement
Advertisement