தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் நடிகர் வடிவேலு தலைமறைவா ?

0
716
vadivelu

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகர் யார் என்று கேட்டவுடன் அனைவரும் முதலில் சொல்லுவது வடிவேலு பெயர் தான். காமெடியில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை வைத்திருப்பவர் வடிவேலு. வைகைப்புயல் வடிவேலுவின் காமெடிக்கள் இன்றளவும் பலரும் ரசிக்கும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. வடிவேலு அவர்கள் சமீப காலமாகவே திரைப்படத்தில் நடிக்காமல் பிரேக் எடுத்து உள்ளார். இருந்தாலும் இவரது வசனங்கள் தான் மீம் கிரியேட்டரகளுக்கு ஒரு பூஸ்ட் என்றும் கூறலாம். வடிவேலு இல்லாத மீம் மற்றும் வீடியோ வேர்சன் இல்லாத மீம் பக்கங்களே கிடையாது. அந்த அளவிற்கு தலைவரின் காமெடி வசனங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்து வந்த பாதை அத்தனை எளிதல்ல.

நான் தலைமறைவாகவில்லை – தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் நடிகர் வடிவேலு பதில்

#க்ரைம்டைம் நான் தலைமறைவாகவில்லை – தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் நடிகர் வடிவேலு பதில்www.News18Tamil.com

News18 Tamil Nadu ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಜನವರಿ 8, 2020

நடிகர் வடிவேலு கடந்த சில மாதமாக படத்தில் நடிக்க தடை இருந்து வந்தது. இதற்கு சில முக்கிய காரணமே 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தான். இந்த விஷயத்தில் சங்கர் மற்றும் வடிவேலுக்கு இழுவை நீண்டு கொண்டே இருக்கிறது. இருப்பினும் வடிவேலு ஒரு சில படங்களில் தலை காண்பித்து வருகிறார். சமீபத்தில் கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் வடிவேலு பேசிய வீடியோ கூட சமூக வளைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான சன் குடும்பம் விருது விழாவில் நடிகர் லாரன்சுடன் சேர்ந்து வடிவேலு நடனமாடி உள்ளார். நடிகர் வடிவேலு அவர்கள் தன்னுடைய நகைச்சுவையால் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதிலும் மறக்க முடியாத நபர் ஆகிவிட்டார்.

இதையும் பாருங்க : விஜய் மீசையில்லாமல் 2019-ல் அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்தி புகைப்படம் வெளியிட்டேன்- உரிமை கொண்டாடும் பிரபல இயக்குனர்.

- Advertisement -

சமீப காலமாகவே இவர் குறித்து சில பிரச்சனைகளும், சர்ச்சைகளும் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது நடிகர் வடிவேலு அவர்கள் சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கிறார் என்ற தகவல் வந்து உள்ளது. இந்நிலையில் நடிகர் வடிவேலு அவர்களின் உதவியாளர் மணிகண்டன் என்பவர் வடிவேலு நடித்த எலி படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் என்பவரைத் தாக்கினார் என்ற தகவல் வந்து உள்ளது. இதனால் தயாரிப்பாளர் சதீஸ் இது குறித்து மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

Related image

-விளம்பரம்-

அதில் அவர் கூறியது, நான் சென்னை சென்று கொண்டிருந்த போது வடிவேலின் உதவியாளர் மணிகண்டன் தன் வீட்டில் புகுந்து ரகளை செய்த செய்து உள்ளார். மேலும், அவர் என்னுடைய மேலாளர் கோவிந்தராஜ் என்பவரையும் தாக்கி இருப்பதாகவும் கூறி உள்ளார். சிசிடிவி ஆதாரத்துடன் சதீஷ் போலீசிஸ் இடம் கொடுத்து உள்ளார். இதனால் காவல்துறை மணிகண்டன் மற்றும் அவருடன் சென்ற 2 நபரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் நடிகர் வடிவேலு தலைமறைவாக உள்ளார் என்ற தகவல் இணையங்களில் வந்து உள்ளது.

இது குறித்து நடிகர் வடிவேலு அவர்கள் ஊடகங்களுக்கு தொடர்பு பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, நான் மீண்டும் படங்களில் நடித்து வருகிறேன். என்னுடைய எதிர்காலத்தை இப்படி எல்லாம் சொல்லி வீணாக்காதீர்கள். இது எல்லாம் முழுக்க முழுக்க வதந்தி. இந்த மாதிரி பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது வைக்காதீர்கள். நான் ஒன்றும் தலைமறைவு ஆகவில்லை. கடந்த வாரம் நான் என்னுடைய குலதெய்வம் கோவிலுக்கு சென்றிருந்தேன் என்று கூறியுள்ளார்.

Advertisement