மஹத் மகனா இது ? அதுக்குள்ள எப்படி வளந்துட்டார் பாருங்க. லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

0
360
mahat
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஹத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. நடிகர் மகத் அவர்கள் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு 2007 ஆம் ஆண்டு காளை என்ற திரைப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் தான் மகத் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

-விளம்பரம்-
mahat-prachi

பின் மோகன்லால் மற்றும் தளபதி விஜய் நடித்த ஜில்லா திரைப் படத்தின் தான் மூலம் மகத் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட பல்வேறு பிரபலமான நடிகர்களில் நடிகர் மற்றும் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஆக்ரோஷமான போட்டியாளராக இருந்த மஹத் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார் மேலும் இவரை நடிகை யாஷிகா ஒரு தலையாகவும் காதலித்து வந்தார்.

- Advertisement -

மஹத்தை காதலித்த யாஷிகா :

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் அடிக்கடி மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். யாஷிகா மஹத்தை உருகி உருகி காதலித்த போதும் அதனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் டபுள் கேம் ஆடி வந்தார் மஹத். இதனால் மஹதின் காதலி பிராச்சி காதலை முறித்துக் கொண்டதாக பலரும் கூறி வந்தனர். பிக் பாஸுக்கு பின்னர் மஹத் வெளியில் வந்த போது கூட பிராச்சி மஹத் மீது கடும் கோபத்தில் இருந்தார்.

யாஷிகாவால் ஏற்பட்ட பிரச்சனை :

பின்னர் எப்படியோ இருவரும் சமாதானம் ஆனார்கள். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் மஹத்தும் யாஷிகாவும் பழகி வந்தனர். மேலும், பிக் பாஸுக்கு பின் மஹத் மற்றும் பிராச்சி இருவரும் ஒரு படத்தில் கூட ஒன்றாக நடித்து இருந்தனர். இந்த நிலையில் மஹத் மற்றும் பிராச்சி திருமணம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்றது.

-விளம்பரம்-

மஹத் – பிராச்சி திருமணம் :

இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக மஹத்தின் நெருங்கிய நண்பரான சிம்பு இந்த திருமணத்தில் ஆட்டமே போட்டார். இப்படி ஒரு நிலையில் மஹத்தின் மனைவி பிராச்சி கர்ப்பமாக இருந்து வந்தார். மஹத் – பிராச்சி தம்பதியினர் தங்கள் குழந்தையை எதிர் நோக்கி காத்திருந்த நிலையில் மஹத் மனைவி பிராச்சிக்கு கடந்த ஜூன் 7 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

பொங்கல் கொண்டாட்டம் :

தன் மகனுக்கு ‘அதியமான்’ என்று பெயர் வைத்துள்ளார். நடிகர் சிம்பு சமீப காலமாக தன்னை ஆத்மன் என்று கூறிகொண்டு வருகிறார். ஒரு வேலை தன் நண்பரின் பெயரை தான் தன் மகனுக்கு வைத்துள்ளாரோ என்னமோ என்று பலர் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் தங்கள் குடும்பத்துடன் மஹத் பொங்கல் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். அதில் மஹத்தின் மகன் நன்றாக வளர்த்து காணப்படுகிறார்.

Advertisement