தாய்ப்பால் தான விழிப்புணர்வுக்கு, மஹத் மனைவி நடத்திய breast feeding போட்டோ ஷூட்.

0
18557
mahat
- Advertisement -

நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான மஹத்திற்கு சமீபித்தல் தான் குழந்தை பிறந்து இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஹத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. நடிகர் மகத் அவர்கள் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு 2007 ஆம் ஆண்டு காளை என்ற திரைப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் தான் மகத் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

-விளம்பரம்-

பின் மோகன்லால் மற்றும் தளபதி விஜய் நடித்த ஜில்லா திரைப் படத்தின் தான் மூலம் மகத் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட பல்வேறு பிரபலமான நடிகர்களில் நடிகர் மற்றும் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஆக்ரோஷமான போட்டியாளராக இருந்த மஹத் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார் மேலும் இவரை நடிகை யாஷிகா ஒரு தலையாகவும் காதலித்து வந்தார்.

- Advertisement -

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் அடிக்கடி மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். இதனால் மஹதின் காதலி காட்சி காதலை முறித்துக் கொண்டதாக பலரும் கூறி வந்தனர்.பின்னர் எப்படியோ இருவரும் சமாதானம் ஆனார்கள். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் மஹத்தும் யாஷிகாவும் பழகி வந்தனர். இந்த நிலையில் மஹத் மற்றும் பிராச்சி திருமணம் கடந்த வருடம் ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்றது.

இப்படி ஒரு நிலையில் மஹத்தின் மனைவி பிராச்சி கர்ப்பமாக இருந்து வந்தார். மஹத் – பிராச்சி தம்பதியினர் தங்கள் குழந்தையை எதிர் நோக்கி காத்திருந்த நிலையில் மஹத் மனைவி பிராச்சிக்கு கடந்த ஜூன் 7 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் மஹத் மனைவி பிராச்சி, தாய்ப்பால் தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தாய்ப்பால் கொடுக்கும் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement