நிட்சயதார்த்ததிற்கு பின்னும் யாஷிகாவுடன் பைக்கில் சுற்றும் மஹத்.! வைரலாகும் புகைப்படம்.!

0
884
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் போட்டியிட்ட பல்வேறு பிரபலமான நடிகர்களில் நடிகர் மஹத்தும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஆக்ரோஷமான போட்டியாளராக இருந்த மஹத் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார் மேலும் இவரை நடிகை யாஷிகா ஒரு தலையாகவும் காதலித்து வந்தார்.

-விளம்பரம்-
yashika

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது நடிகர் மஹத்துடன் காதலில் விழுந்தார். ஆனால், மஹத் பராச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை காதலித்து வந்ததால் யாஷிகாவின் ஆசை வீணாகி போனது. இருப்பினும் இவர்கள் இருவருக்கும் ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு தான் இருந்தது.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் மஹத்தும் யாஷிகாவும் பழகி வந்தனர். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட நடித்து வருகின்றனர். இந்த நிலையில் முகத்திற்கும் அவரது காதலியான பிராச்சிக்கும் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில் மஹத் மற்றும் யாஷிகா பைக்கில் ஊர் சுற்றும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது. ஆனால், இந்த புகைப்படம் இவர்கள் இருவரும் நடித்து வரும் படத்தின் போது எடுக்கபட்டது என்று பின்னர் தான் தெரியவந்தது.

-விளம்பரம்-

Advertisement