ஒரு வழியாக மஹத் தனது காதலியை சந்தித்துவிட்டார் !

0
85
mahath
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை வெளியேறியுள்ள போட்டியாளர்களிலே மக்களால் மிகவும் வெறுக்கப்ட்டு பின்பு வெளியேறியவர் மஹத் மட்டும் தான். பிக் பாஸ் யாஷிகாவுடன் ஏற்பட்ட காதலால் 2 ஆண்டுகள் காதலித்து வந்த பிராச்சியுடனான காதலை இழந்திருந்தார் மஹத்.

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மஹத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உங்கள் அன்பிற்கும், என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ள மஹத், “உண்மையாக இந்த உலகில் எவரையும் விட உன்னை காதலிக்கிறேன் பிராச்சி” என்றும் பதிவிட்டிருந்தார்.

ஆனால், இதற்கு பிராச்சியிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராத நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிராச்சியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் மஹத்.ஆனால், அந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா இல்லை ஏற்கனவே எடுத்த புகைப்படத்தை மஹத் பதிவிட்டுள்ளாரா என்பது தெரியவில்லை.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை யாஷிகவை காதலிக்கிறேன் என்று கூறிவந்தார் மஹத். ஆனால், தற்போது வெளியே வந்ததும் மீண்டும் பிரச்சியை காதலிப்பதாக கூறியுள்ளது, உண்மையில் மஹத் யாரை தான் காதலிக்கிறார் என்ற ஒரு சந்தேகம் எழுப்பியது.

அதே போல தற்போது மஹத்தின் காதலி பிராச்சி துபாயில் இருப்பதால் அவரை நேரில் சந்திக்கமுடியாமல் இருந்து வந்தார் மஹத். இருப்பினும் இன்ஸ்டாகிராம் மூலம் அடிக்கடி பிராச்சிக்கு தனது காதலை தெரிவித்திருக்கிறார். மஹத்தை காதலை மீண்டும் பிராச்சி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்று இன்னமும் உறுதியாக தெரியவில்லை.

Advertisement