உங்கள பாத்தா Friends மாதிரியே தெரியலையே – விசித்ரா கேட்ட கேள்வி. மணி-ரவீனாவின் மழுப்பலான பதிலை பாருங்க

0
1603
- Advertisement -

மணி- ரவீனா இடையே இருக்கும் காதல் குறித்து ஓப்பனாக விசித்ரா கேட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி 9 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

-விளம்பரம்-

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள். இந்த சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நபரை கேப்டன் தான் தேர்ந்து எடுப்பார். சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி:

கடந்த வாரம் நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார். இரண்டாம் வாரத்திற்கான கேப்டனாக சரவணா விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது மொத்தம் 16 பேர் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். இரண்டாம் வாரத்திற்கான நாமினேசன் பட்டியலில் அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா, விஷ்ணு, மாயா, பிரதீப் ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் மணி-ரவீனா :

வழக்கம் போல் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் வெடிக்க தொடங்கி விட்டது. இது ஒரு பக்கம் இருக்க, எல்லா சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி இருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்த சீசனில் மணிச்சந்திரா- ரவீனா இருவரும் காதல் ஜோடிகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து நிறைய ரில்ஸ் வீடியோக்கள், நடனமெல்லாம் செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மணி-ரவீனா காதல் :

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து பங்கேற்று இருக்கிறார்கள். முதல் நாளே இவர்கள் இருவரும் வேக்கப் பாடலில் பயங்கரமாக ஆட்டம் போட்டு திடீரென்று ரவீனா மணி இடுப்பில் உட்காந்ததெல்லாம் பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அடிக்கடி ரவீனா- மணி இருவரும் தனியாக சந்தித்து பேசி கொள்கிறார்கள். குறிப்பாக, இருவரும் ரகசியம் பேசுகிறோம் என்று பிக் பாஸ் விதியை மீறி கையில் எழுதி பேசிருந்தார்கள். இதை கமலும் கண்டித்திருந்தார். இப்படி இவர்கள் இருவரும் பேசுவது குறித்து வெளியில் மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிலேயே சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

விசித்திரா கேட்ட கேள்வி:

இந்த நிலையில் ரவீனா- மணி இருவரும் நெருக்கமாக பழவதை பார்த்து விசித்திரா, நீங்கள் ரெண்டு பேரும் லவ்வரா? என்று ஓபனாக கேட்டிருக்கிறார். உடனே ரவீனா, இல்லை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விசித்திரா, நீங்கள் பழகுவதை பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லை. காதலர்கள் போல் இருக்கிறீர்கள். அதில் ஒன்றும் தப்பில்லை என்று சொல்லி இருக்கிறார். உடனே ரவீனா, நாங்கள் இருவரும் நண்பர்கள் தான்.

கொஞ்சம் நெருக்கமான நண்பர்கள் என்று மழுப்பி பேசி இருக்கிறார். உடனே மணி நீங்க சொல்லியே வந்துடும் போலவே என்று கூறி இருக்கிறார். அதே போல விஷ்ணு, பூர்ணிமா, மாயா ஆகியோர் பேசிக்கொண்டு இருக்கும் போது விஷ்ணு ‘அவர்கள் இருவரும் வெளியில் இருக்கும் போதே காதலர்கள் தான் என்று சொன்னார்கள். ஆனால், கேட்டால் நண்பர்கள் என்று சொல்கிறார்கள் என்று மாயாவிடம் கூறி இருந்தார்.

Advertisement