என் பையனுக்கும் உனக்கும் எவ்ளோ வயசு வித்யாசம் தெரியுமா? ரவீனாவிற்கு ஷாக் கொடுத்த மணியின் அம்மா.

0
1070
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தனர்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

பின் நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருந்தனர். குறிப்பாக விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள். பின் கடந்த வார நாமினேஷனில் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், கூல் சுரேஷ் வெளியேறி இருக்கிறார். இந்த வாரம் கேப்டன் யாரும் இல்லை. இதனால் போட்டியாளர்கள் குஷி ஆகி விட்டார்கள்.

பிக் பாஸ் வீட்டில் மணி பெற்றோர்கள்:

அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார்கள். இதனால் பிக் பாஸ் வீடே எமோஷனல் ஆகி இருக்கிறது. அந்த வகையில் மணி உடைய பெற்றோர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் போட்டியாளர்களிடம் பேசி இருக்கிறார்கள். அப்போது ரவீனா, நான் 2003 இல் பிறந்தேன் என்று சொன்னவுடன் மணியன் அம்மா, அப்படியா மணிக்கும் உனக்கும் 10 வருடம் வித்தியாசமா? என்று சொல்கிறார்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் விமர்சனம்:

அதற்கு ரவீனா சிரிக்கிறார், என்ன சொல்வது என்று புரியாமல் மணி பேந்தபேந்த முழிக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வேலை இவர்கள் காதல் குறித்து தான் மணியம்மா இப்படி எல்லாம் கூறுகிறார்களா? இதற்கு பின் உள்குத்து இருக்கிறதா? என்றெல்லாம் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எல்லா சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி இருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்த சீசனில் மணிச்சந்திரா- ரவீனா இருவரும் காதல் ஜோடிகளாக இருக்கிறார்கள்.

மணி-ரவீனா காதல்:

.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து நிறைய ரில்ஸ் வீடியோக்கள், நடனமெல்லாம் செய்திருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளே இவர்கள் இருவரும் வேக்கப் பாடலில் பயங்கரமாக ஆட்டம் போட்டு திடீரென்று ரவீனா மணி இடுப்பில் உட்காந்ததெல்லாம் பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. பின் இருவரும் தனியாக சந்தித்து பேசி கொள்வது, ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து விளையாடுவது என்று செய்து இருக்கிறார்கள். இதனால் கமலே இவர்களை கண்டித்து இருக்கிறார்.

Advertisement