பிராவோ அப்படி பாக்குறான்னு Funஆ சொன்னார்களாம் – Funஆ சொன்ன லட்சனத்தை நீங்களே பாருங்க.

0
185
- Advertisement -

மாயா ஒரு லெஸ்பியன் என்று பாடகி சுஜித்ரா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி 37 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல்.

- Advertisement -

இதற்கு முழு காரணம் மாயா என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே மாயா, தான் பெரியவள் என்றும், தனக்கு தான் எல்லாம் தெரியும் என்றும் திமிராக நடந்து வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் உள்ள பல போட்டியாளர்களுடன் சண்டை சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தனக்கென்று ஒரு கேங் ஃபார்ம் செய்து கொண்டு பிற போட்டியாளர்களை வம்பிழுத்துகிறார்.

முதலில் இவர் விஜய் வர்மா உடன் சேர்ந்து கொண்டு மற்றவர்களை கிண்டல் செய்தார். அதற்கு பிறகு பூர்ணிமா, ஐசுவை தன்னுடைய கூட்டணியில் சேர்த்துக்கொண்டு விமர்சித்து பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் பற்றி பின்னால் பேசியது குறித்து அனைவர் முன்பும் போட்டு காண்பித்து அதற்கு விளக்கமும் கொடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிராவோ பெண்களை தப்பாக பார்க்கிறார் என்று பூர்ணிமாவிடம் மாயா மற்றும் ஐசு ஆகிய இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அதிலும் மாயா, பூர்ணிமாவை பின்னால் தடவி இங்கே எல்லாம் அவன் பார்க்கிறான் என்றும் கூறி இருந்தார். இதுகுறித்து இன்று அனைவர் முன்பும் திரையில் போட்டப்பட்ட போது நாங்கள் ஜாலியாக இதை சொன்னோம் என்றும் மாயா மற்றும் ஐசு இருவரும் சர்வ சாதாரணமாக சொன்னார்கள்.

இந்த விஷயம் திரையில் போடப்பட்டதும் முகமே மாறிய பிராவோ. நான் அப்படி என்ன தப்பாக பார்த்தேன் என்று கேட்டதற்கு நாங்கள் சும்மா ஜாலியாக தான் கலாய்த்தோம். நீங்கள் Gentleman. அப்படியும் மீறி நாங்கள் பேசியது உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று இது எதோ பேசிய விஷயம் இல்லாததை போல கடந்து சென்றுவிட்டனர். இதுவே பிரதீப் பேசியதை Funஆக பேசினேன் என்று சொல்லி இருந்தால் விட்டு இருப்பார்களா என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

Advertisement