ஊரே கழுவி ஊற்றினாலும் மாயாவிற்கு கிடைத்த ஹீரோயின் வாய்ப்பு – அதுவும் ஹாலிவுட் பிரபலத்தின் இயக்கத்தில்.

0
183
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதாநாயகியாக மாயா அறிமுகமாக இருக்கும் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 102 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இன்னும் இந்த நிகழ்ச்சி சில நாட்கள் தான் இருக்கிறது. இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

தற்போது பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, விஜய் வர்மா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஆறு பேர் இருக்கிறார்கள். இதில் நேற்று மிட் வீக் எவிஷனில் விஜய் வர்மா வெளியேறி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிச்சயமான நபர்களில் ஒருவராக நுழைந்தவர் தான் மாயா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த லியோ படத்தில் சில காட்சியில் நடித்திருந்தார்.

மாயா குறித்த தகவல்:

இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் மாயாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. பின் நாட்கள் செல்ல செல்ல இவருடைய செயல்கள் கடுப்பை ஏற்றி இருக்கிறது. மற்ற போட்டியாளர்களை கிண்டல், கேலி செய்வது, குரூப் பார்ம் செய்து கொண்டு மற்றவர்களை தாக்கி பேசுவது போன்ற பல காரணங்களால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பு உண்டானது. இருந்தாலும், இவர் தாக்குப் பிடித்து டாப் 5ல் வந்தார்.

-விளம்பரம்-

மாயாவுக்கு கிடைத்த வாய்ப்பு:

இந்த நிலையில் மாயாவிற்கு பட வாய்ப்பு கிடைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது வழக்கம் தான். சில பேர் அந்த வாய்ப்பை தக்க வைத்தாலும் சில பேருக்கு நீடிப்பதில்லை. அந்த வகையில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகும் வாய்ப்பு மாயாவிற்கு கிடைத்து இருக்கிறது. Yannick Ben என்பவர் இயக்கத்தில் உருவாகும் புது படத்தில் தான் மாயா நடிக்க இருக்கிறார்.

மாயா நடிக்கும் படம்:

Yannick Ben ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக, மாவீரன், வெந்து தணிந்தது காடு, ஜவான் போன்ற படங்களில் எல்லாம் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். தற்போது இவர் புதுப்படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் தான் மாயா அவர்கள் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement