பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா.! லீக்கான புகைப்படம் இதோ.!

0
13647
Meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 5 வது வாரத்தை நெருங்கியுள்ள நிலையில் இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா ஆகிய மூன்று பேர் வெளியேறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்ஸை அடுத்து சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். மேலும், கடந்த 5 நாட்களாக இந்த வாரத்திற்கான ஓட்டிங் மும்மரமாக நடைபெற்றது.

இதையும் பாருங்க : சிறையில் லாஸ்லியா மற்றும் அபி செய்த செயல்.! முகம் சுழித்த தர்ஷன், முகென்.! அதிலும் லாஸ்லியா டிரஸ் பாத்திங்களா.!

- Advertisement -

இந்த சீசன் ஆரம்பத்திலிருந்தே வனிதாவிற்கு பிறகு சாக்க்ஷி தான் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்டார். அதற்கு ஏற்றார் போல சாக்க்ஷியும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றார். எனவே, இந்த வாரம் சாக்க்ஷியை வெளியேற்ற ரசிகர்கள் மும்மரமாக வாக்களித்தனர். இந்த நிலையில் மீரா இந்த வாரம் வெளியேறியுள்ளதாக அதிகாரபூர்வ புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை வரை சாக்க்ஷிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் வந்திருந்தன. ஆனால், நேற்று ஒரு நாள் மட்டும் சாக்க்ஷிக்கு அதிகப்படியான வாக்குகள் விழுந்தன. இதற்க்கு முக்கிய காரணமே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீரா, சேரன் தன்னை தப்பாக தொட்டார் என்று குற்றம் சாட்டியதால் தான்.

-விளம்பரம்-
Advertisement