SK படத்தில் இணைந்துவிட்டதாக பதிவிட்ட பிக் பாஸ் நடிகை.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.! பண்ணமாட்டாங்களா பின்ன.!

0
4312
namma-veettu-pillai
- Advertisement -

மிஸ்டர் லோக்கல் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 16 வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

-விளம்பரம்-

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர்களாக யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : பிச்சை போட்டா உனக்கு வேணுமா, சொல்லு.! வெளுத்து வாங்கும் வனிதா.! 

- Advertisement -

மேலும், இந்த படத்திற்கு நம்ம வீட்டு பிள்ளை என்று தலைப்பை வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று சமீபத்தில் வெளியேறிய மீரா மிதுன் கமிட் ஆகியுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ளார் மீரா மிதுன், உங்கள் வாழ்த்துக்களுடன் நம்மவீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் உங்களை மிக விரைவில் நான் சந்திக்க உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் பலரும், சிவகார்த்திகேயன் படத்தில் மீரா மிதுனா என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement