நீயெல்லாம் எப்படிமா வந்த – வணக்கம் தமிழா Vj பவித்ராவை வம்பிழுத்த மீரா மிதுன்.

0
1717
bavithra
- Advertisement -

சமூக வலை தளத்தில் கடந்த சில வாரமாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் மீரா மிதுன் இறந்துவிட்டார் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று போடப்பட்டிருந்தது. இந்த ட்வீட்டை மீராமிதுன் போட்டாரா இல்லை வேறு யாராவது மீராமிதுன் கணக்கை ஹேக் செய்து இந்த பதிவை போட்டார்களா என்பது தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் பலரும் மற்ற சர்ச்சை போலவே இந்த ட்விட்டையும் போட்டு மீராமிதுன் பிரபலத்தை ஏற்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள் என்று கமன்ட் செய்து வந்தார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் பேசுகையில் என்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது. இது குறித்து நான் புகார் அளித்து இருக்கிறேன். நரேந்திர மோடி டுவிட்டர் கணக்கு ஹேக் செய்கிறார்கள் என் கணக்கு எல்லாம் என்ன. மேலும், நான் நலமாகத்தான் இருக்கிறேன் பாதுகாப்பாக இருக்கிறேன் என்னுடைய வேலையை நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

வீடியோவில் 46 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

நான் எத்தனையோ பெண்களை பேஷன் உலகத்தில் வளர்த்துவிட்டு இருக்கிறேன். அவ்வளவு ஏன் சன் டிவி விஜே பவித்ரா, நீயெல்லாம் எப்படிமா பெரியாளான. அந்த பொண்ண நான் தான் ட்ரெயின் பண்ணி 2017 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வெல்ல வைத்தேன் என்று கூறியுள்ளார் மீரா மிதுன்.

-விளம்பரம்-
Advertisement