என்னது,விஜய்யும் மீரா மிதுனை காபி அடிச்சிட்டாரா. மீரா போட்ட பதிவை பாருங்க.

0
10239
vijaymeeramithun
- Advertisement -

பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

-விளம்பரம்-
Image result for master second look

- Advertisement -

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று லீலா பேலஸில் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது திகில் படத்தின் இசை வெளியீட்டின் போது பாஸ் இருந்தும் ரசிகர்கள் சிலர் அனுமதிக்கப் படாததால் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும், தற்போது நாடு முழுவதும் பீதியால் பல்வேறு படத்தின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணத்தினால் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் வழக்கம் போல இந்த விழாவில் விஜய் பேச்சு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இசை வெளியீட்டு விழா முடிந்து இருந்த நிலையில் ரசிகர்களின் குடியை கெடுக்கும் விதமாக சர்ச்சை நாயகி மீரா மிதுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தவர்தான் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தன்னை பார்த்து தான் காபி அடிக்கப்பட்டுள்ளது என்று புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார். மாஸ்டர் படத்தில் இருந்து இதுவரை மூன்று போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. இதி ல்இரண்டாவது போஸ்டரில் கருப்பு கண்ணாடி அணிந்திருக்கும் விஜய் வாயில் கை வைத்தபடி நின்றிருப்பார் தற்போது இதே போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்ட மீரா மிதுன்.

யார் யாரை காப்பியடித்து உள்ளது. இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிங்பிஷர் ராம் பாக் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட. எனவே, இதற்கான பதில் கிடைத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளா.ர் மீரா மிதுன் ஏன் இந்த பதிவு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மீராமிதுன் இப்படி செய்வது ஒன்றும் புதிதான விஷயமல்ல சமீபத்தில் முன்னணி நடிகைகள் சிலர் தனது போஸ்களை காபி செய்வதாக மீராமிதுன் பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement