பிக்பாஸ் மீரா மிதுன் ஒரு மத்திய அரசாங்க அதிகாரி என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும்,இது குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். நடிகை மீரா மிதுனை பற்றி சொல்லவே வேண்டாம். எல்லாருக்குமே தெரியும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே பார்த்திருப்பீர்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் மீரா மிதுன் பற்றி பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. ஏன்னா, அந்த அளவிற்கு நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை உருவாக்கியவர். அதிலும் சமீப காலமாகவே தமிழக அரசையும், தமிழக போலீசாரையும் மீரா மிதுன் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மேலும்,இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது மற்ற போட்டியாளர்களுடன் மோதி பல பிரச்சனைகளை ஏற்படுத்தியவர். அதோடு இவர் சில காரணங்களால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு மீரா மிதுன் குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் வந்த வண்ணமே உள்ளன. அதோடு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் ‘சர்ச்சை நாயகி’ என்று கூட இவரை அழைக்கிறார்கள். மேலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலஹாசன் அவர்கள் குறித்து பல புகார்களை பதிவுட்டுள்ளார். இது அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும், இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் ஒரு மாடல் அழகியாக இருந்தார். அது பொய் என்றும், இவர் மாடலிங் செய்பவர்களிடம் இருந்து பணம் வாங்கி ஏமாற்றுகிறார் என்றும் பல வதந்திகள் வந்தது.

Advertisement

இதையும் பாருங்க : இரண்டு கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ள விஜய் சேதுபதி. சங்கத்தமிழன் விமர்சனம்.

இதுகுறித்து பார்மர் மேனேஜர் மற்றும் ஃபார்மர் பிரெண்ட் ஜோ மைக்கல் அவர்களும் கூறியிருந்தார். மேலும், இதுகுறித்து மீரா கூறியது, அவர்கள் எல்லாம் பொய்யான தகவல்களை என்மீது சொல்கிறார்கள்.இந்த நிலையில் தற்போது அனைவரும் வியக்கும் அளவிற்கு ஒரு தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் மீரா மிதுன் தமிழ்நாடு ஸ்டேட் anti-corruption கமிஷன் என்று தெரிகிறது.அதாவது இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்து மீரா மிதுன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது,” இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. நான் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்” என்று கூறி பதிவிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் லஞ்ச ஒழிப்புத் துறையின் அலுவலகத்திலிருந்து இவருக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைத்திருந்த கடிதத்தை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். அதில் இவருடைய பெயர் தமிழ்ச்செல்வி என்று இருந்தது. அவளுடைய உண்மையான பெயர் தமிழ்ச்செல்வியா?? என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த தகவல்கள் எல்லாம் உண்மையா? பொய்யா?என்ற குழப்பத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.

Advertisement
Advertisement