இரண்டு கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ள விஜய் சேதுபதி. சங்கத்தமிழன் விமர்சனம்.

0
12875
sangatamilan
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. மேலும்,இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் “சங்கத் தமிழன்” படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ்,சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் சங்கத்தமிழன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது என்ற தகவல் வெளிவந்து உள்ளது. இத்திரைப்படத்தினை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் மற்றும் மெர்வின் அவர்கள் இசை அமைத்து உள்ளார்கள். சங்கத்தமிழன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல் ராஜ். மேலும், ப்ரவீன் எடிட்டிங் செய்து உள்ளார். மேலும்,இந்த சங்கத் தமிழன் படம் முழுக்க முழுக்க அரசியல் மற்றும் அதிரடி, ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.

-விளம்பரம்-
Image result for sangatamilan"

- Advertisement -

கதைக்களம்:

சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ‘சங்கத்தமிழன்,முருகன்’ என்ற இரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். விஜய் சேதுபதி அவர்கள் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இதுவரை இந்த அளவுக்கு ஒரு மாஸ் ஹீரோயிஸம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி அவர்கள் நடித்து இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு அவருடைய ஆக்ஷன் இந்த படத்தில் காட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் ஒவ்வொரு டயலாக்கும் புல் அரிக்கும் வகையில் இருக்கிறது.

இதையும் பாருங்க : பெற்றோருடன் சேர்ந்து கோவிலில் இப்படி ஒரு நேர்த்திக்கடன். மாப்பிளை உறுதியாகிவிட்டதா காஜலுக்கு.

-விளம்பரம்-

அதிலும் ‘ஒருத்தன் வரணும் என்று ஆண்டவன் முடிவு பண்ணிட்டான்னு வெச்சிக்கோ நீ என்ன தான் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டு,பூட்டு போட்டாலும் லாக் ஆகாது,ஏன்னா சாவி அவன் கிட்ட இருக்கும் என்று சொன்ன டயலாக் மூலம் ரசிகர்களை விஜய் சேதுபதி தெறிக்கவிட்டாரு. மேலும்,நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் கையில் காப்பு, கண்ணாடி, மிரட்டும் மீசை என வித்தியாசமான கெட்டப்பில் கிராமத்து சிங்கத்தைப் போல நடித்து உள்ளார். மேலும்,இந்த படத்தில் மண்ணுக்கு ஒண்ணுன்னா உயிரை கொடுப்பேன் என்பதற்கு ஏற்றவாறு விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் உள்ளது. இந்த படத்தில் முருகன் மற்றும் சங்கத்தமிழன் என்ற இரண்டு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

Image result for sangatamilan"

முருகன் என்பவர் சென்னையில் வாழ்பவர். மேலும், இவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், சங்கத்தமிழன் என்பவர் கிராமத்தில் வாழ்பவர். இந்நிலையில் முருகன் என்பவர் சென்னையில் மிகப்பெரிய தொழிலதிபர் சஞ்சய் என்பவரின் மகளை காதலிக்கிறார். மேலும்,தொழிலதிபர் மகள் தான் ராசி கண்ணா. அப்போது அந்த தொழிலதிபர் முருகனை தீர்த்துக்கட்ட வருகிறார். அப்போது முருகனை பார்க்கும் போது தான் தன்னுடைய பழைய எதிரியான சங்கத் தமிழன் ஞாபகத்துக்கு வருகிறது. ஏன் என்றால் முருகன்,சங்கத்தமிழன் ஆகிய இரண்டு பேருடைய முகமும் ஒரே மாதிரி இருக்கு. அப்போது தான் படத்தின் கதையே தொடங்குகிறது.

மேலும், சங்கத் தமிழன் யார்? அவருக்கும் அந்த தொழிலதிபர் சஞ்சய்க்கும் என்ன பிரச்சனை? என்று கதை (இரண்டாம் பாகம்) தொடங்குகிறது. சங்கத்தமிழன் ஒரு கிராமத்து சிங்கம் போல் சீறி இருப்பவர். தன்னுடைய கிராமத்தில் சஞ்சய் அவர்கள் காப்பர் ஃபேக்டரி ஒன்றைச் ஆரம்பிக்க வருகிறார். அந்த காப்பர் கம்பெனியை வைக்கக்கூடாது என்று எதிர்த்து நிற்கிறவர் தான் சங்கத்தமிழன். இதனால் இவர்களுடைய மோதல் தொடங்குகிறது. அதுமட்டுமில்லாமல் காப்பர் தொழிலால் நிறைய நஷ்டமடைந்த தொழிலதிபர் சஞ்சய் முருகனை வைத்து படமெடுக்க திட்டமிடுகிறார்.

Image result for sangatamilan"

பின் முருகனுக்கும் தொழில் அதிபருக்கும் இடையே பிரச்சினை எப்படி முடிகிறது. அதோடு சங்கத்தமிழன், முருகன் இருவரும் சேர்ந்து அந்த தொழிலதிபரை என்ன செய்கிறார்கள்? என்பது தான் படத்தின் சுவாரசியமே. மேலும், சங்கத்தமிழன், முருகன், தொழிலதிபர் சஞ்சய் மூவருக்கும் இடையே என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக வந்துள்ளது. இந்தப் படத்தில் தான் வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்டா நாயகன், நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் விஜய் சேதுபதி உடன் இணைந்து உள்ளார். மேலும்,இவர்களுடைய காம்பினேஷன் நன்றாக உள்ளது.

பிளஸ்:

சங்கத் தமிழன் படத்தில் நாசர், நிவேதா பெத்துராஜ் நடிப்பு வேற லெவல்.

அதோடு சங்கத்தமிழன் படத்தின் பிஜிஎம், எடிட்டிங் டயலாக் எல்லாமே சூப்பர். படத்தின் இன்டர்வல் சீன் வெறித்தனமாக இருந்தது.

சங்க தமிழன் படம்ஒரு “கம்ப்ளீட் ஃபேமிலி பேக்கேஜ்” ஆகும்.

விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பு தீயாக இருந்தது என்றும் கூறினார்கள் ரசிகர்கள்.

நடிகை ராசி கண்ணா வரும் காட்சிகள் எல்லாம் சிறப்பாகவும் அழகாகவும் இருந்தது.

Image result for sangatamilan"

மைனஸ்:

இந்த படத்தின் முதல் பாகம் ரொம்ப ஸ்லோவாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் விஜய் சந்தர்.

அதுமட்டுமில்லாமல் இரண்டு வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதால் ஒருவருடைய கதாபாத்திரத்தை உயர்த்தியும், மற்றவரை தாழ்த்தியும் வைத்த மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கு.

படத்தில் ஒரு ஹீரோயினி ரோமன்ஸ் பார்க்கவே முடியாது. இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் ரொமான்ஸ் பார்ப்பதற்கு கொஞ்சம் கஷ்டம் தான்.

கதையை கொஞ்சம் பொறுமையாக எடுத்து சென்றுள்ளார்.

படம் அலசல்:

இதுவரை விஜய் சேதுபதி நடித்ததிலேயே இந்த படம் ஒரு புது முயற்சி. மேலும்,படத்தை கொஞ்ச நேரம் பார்த்த பிறகு தான் என்ன கதை என்று புரிகிறது. அந்த அளவிற்கு கொஞ்சம் ஸ்லோவாக போனது.படத்தின் முதல் பாகம் கொஞ்சம் மொக்கை தான்.இரண்டாம் பாகம் சூப்பர். மொத்தத்தில் படம் சுமாராக தான் உள்ளது என்ற கருத்துக்கள் வருகின்றன.

Advertisement