அடேங்கப்பா, இன்ஸ்டாகிராமில் பேட்டி கொடுக்க இவ்வளவு பணம் வாங்குகிறாராம் மீரா. ஆதாரம் இதோ.

0
840
meera
- Advertisement -

சமூக வலை தளத்தில் கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருபவர் நடிகை மீரா மிதுன். சூப்பர் மாடல் என்று தன்னைத் தானே சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் மீராமிதுன் ஒரு சில படங்களில் தலை காண்பித்து இருக்கிறார். ஆனால், இவரை பலருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் தெரியும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இவர் கூறிய பொய்களும் ஆடிய பித்தலாட்டத்தினால் ரசிகர்கள் இவரை முழுமையாக வெறுத்தார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் இவரை யாரும் கண்டு கொள்ளாததால் அடிக்கடி ஏதாவது சரியான விஷயங்களை கூறிக்கொண்டே இருந்தார். அதிலும் கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து என்னென்னமோ கூறி வந்தார். ஆனால் விஜய் மற்றும் சூர்யா குறித்து பேசியது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இதனை ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டியை எடுத்துக்கொண்ட மீராமிதுன் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த வீடியோவில் பேசிய அவர், நாம் தமிழ்நாடு மீடியா பற்றி பேசினால் அதன் ஒரே நோக்கம் என்னவென்றால் பணம் தான். யார் காசு கொடுத்தாலும் அவர்களைப் பற்றி எழுதுவார்கள். அதே போல யார் சரியாக பணம் கொடுத்தாலும் அவர்கள் என்ன சொல்வார்களோ தலையாட்டிக்கொண்டு அதனை எழுதுவார்கள். ஆனால் இதற்கு எல்லாம் நான் எதிரானவள். நான் எந்த ஒரு தமிழ்நாடு மீடியாவுக்கும் பணம் கொடுத்தது கிடையாது இது அனைத்து மீடியாக்களுக்கும் தெரியும் என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவுக்கு கீழ் கமெண்ட் செய்திருந்த ரசிகர் ஒருவர் நீ காசு கொடுக்கிற கூட்டம் இல்ல. ஏன்னா நீயே ஒரு பிச்சைக்காரி தான். நீ காசு கேட்டு அலைகிற கூட்டம் என்று பதிவிட்டு, ஒரு ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் மீரா மிதுனிடம் இன்ஸ்டாகிராமில் 30 நிமிடம் லைவ் செஷன் வருவதற்கு ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு மீரா மிதுன் அதற்காக நாம் பணம் வாங்குவேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபர் எவ்வளவு என்று கேட்டதற்கு 20,000 என்று சொல்லியிருக்கிறார் மீரா மிதுன். இன்ஸ்டாகிராமில் பேட்டி கொடுக்கவே மீராமிதுன் 20,000 கேட்கிறார் என்றால் இன்னும் யூடியூபில் பேட்டி கொடுக்க எத்தனை லட்சங்களை கேட்பார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

-விளம்பரம்-
Advertisement