இதெல்லாம் கொரோனாவை விட கேவலமா இருக்கு. மீரா மிதுன் சர்ச்சை குறித்து வெங்கட் பிரபு பேட்டி.

0
956
meera
- Advertisement -

தற்போது தமிழ் நாட்டில் பல பிரச்சனை சென்று கொண்டு இருந்தாலும் ஒரு பக்கம் மீரா மிதுன் பிரச்சனை சென்று கொண்டு தான் இருக்கிறது. மீரா மிதுனுக்கு அறிமுகம் தேவையா என்ன ? விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மீராமிதுன். ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி முன்னதாகவே அழகிப் போட்டியில் நடத்துவதாக கூறி பித்தலாட்டத்தை ஈடுபட்டதாக இவர் மீது பல்வேறு வழங்கப்படும் பதிந்துள்ளது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த சர்ச்சைகள் கொஞ்ச நஞ்சம் கிடையாது.

-விளம்பரம்-

சமீப நாட்களாக பல்வேறு பிரபலங்களை வம்பிழுத்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொள்ள முயற்சித்தும் வருகிறார்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய்,கமல் என்று பலரை பற்றி சர்ச்சை ஏற்படுத்தி வந்த மிதுன், சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா குறித்தும் அவர்களது மனைவிகள் குறித்தும் அவதூறாக பேசி இருந்தார்.இதனால் விஜய் ரசிகர்கள் சார்பாக மீரா மிதுன் மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

- Advertisement -

மேலும், விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகளும் மீரா மிதுனை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள வெங்கட் பிரபுவும் மீரா மிதுன் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில், சினிமாவில் இருப்பவர்களை சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர்களை வைத்து இப்படி பேசுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எந்த பிரச்சனை இருந்தாலும் அதை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

வீடியோவில் 3 நிமிடத்தில் பார்க்கவும்

அது மட்டுமல்லாமல் தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக அனைவருமே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எதிர்கொண்டு வருகிறோம். இப்படி ஒரு நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் கொரோனாவை விட மிகவும் கேவலமாக இருக்கிறது. அனைத்து துறைகளிலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். ஆனால் சினிமாவில் மட்டும்தான் கிசுகிசுக்கள் மிகவும் பெரும் பிரச்சனையாக மாறிவிடுகிறது. சினிமாவில் கிசுகிசு என்பது புதிதல்ல. ஒருவரைப்பற்றி தவறாக பேசுவதை அனைவரும் நிறுத்த வேண்டும். இதையே தான் நான் ரசிகர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார் அகற்றவும்

-விளம்பரம்-
Advertisement