சூப்பர் மாடல் மீரா மிதுனை விஜய் டிவி நிகழ்ச்சியில் வச்சி செய்த குக்கு வித் கோமாளி புகழ்.

0
1169
pugal
- Advertisement -

சமூக வலைதளத்தில் கடந்த சில வாரமாகவே மீராமிதுன் தான் மிகவும் ஒரு சர்ச்சையான நபராக இருந்து வருகிறார். நடிகையும் மாடல் அழகியான இவர் கடந்த சில வாரமாக விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வருகிறார். இதனால் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் கடும் கோபத்துக்கு உள்ளாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் நிகழ்ச்சி ஒன்றில் மீரா மிதுனை பங்கமாக கலாய்த்து தள்ளியிருக்கிறார்

-விளம்பரம்-
Super Model மீராவை கலாய்த்து புகழின் அட்டகாசம் வேற லெவல்

Super Model மீராவை கலாய்த்து புகழின் அட்டகாசம் வேற லெவல்முடிந்தால் சிரிக்காமல் இருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Praveen Television – Tamil ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಮಂಗಳವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 1, 2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சில தினங்களுக்கு முன்பு தான் வெற்றிகரமாக முடிவடைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சி. சமையல் நிகழ்ச்சி என்றால் மற்ற நிகழ்ச்சிகளை போல அனைவரும் சமையல் தெரிந்து வந்து செய்வது கிடையாது. சமையல் தெரிந்தவர்களுடன் சமையல் செய்ய தெரியாதவர்கள் இணைந்து செய்யும் நிகழ்ச்சி. விஜய் டிவி இந்த முறை சமையல் நிகழ்ச்சியில் ஒரு புது மாதிரியான அட்ராசிட்டியை கொண்டு வந்து இருந்தது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றதர்க்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் இருந்த கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்த்த ஒரு கும்பலும் இருந்தது. தற்போது குக் வித் கோமாளியின் செலிபிரிட்டி ஆக சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் நம்ம புகழ்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களில் புகழ் இல்லாமல் இருப்பது கிடையாது. அது போக இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்குபெற போவதாக ஒரு கிசுகிசு வெளியானது. இப்படி ஒரு நிலையில்விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்டார் ஜோடிகள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புகழ், மீராமிதுன் போல வேடம் போட்டுக்கொண்டு மீராமிதுன் பங்கமாக கலாய்த்திருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement