சன் மியூசிக்கில் இருந்த போது சூர்யாவின் உயரத்தை கேலி செய்த அழகு சீரியல் நடிகையை சிங்கப்பெண் என்று குறிப்பிட்ட மீரா – அதற்கு அவர் கொடுத்த பதிலடி.

0
3645
sangeetha
- Advertisement -

கடந்த சில தினங்களாக மீரா மிதுன் தான் சமூகவலைதளத்தில் கடைசியாக பேசப்பட்டு வரும் ஒரு நபராக இருந்து வருகிறார் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசியதை பலரும் கண்டித்து வருகின்றனர்.மேலும், பல்வேறு பிரபலங்களும் மீரா மிதுனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அழகு சீரியல் வில்லியாக நடித்த நடிகையும் சன் மியூசிக் தொலைக்காட்சியின் முன்னாள் Vj -வுமான சங்கீதா, நடிகை மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்

-விளம்பரம்-

நடிகை சங்கீதா சன் மியூசிக் தொலைகாட்சியில் பணியாற்றிய போது 2018 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் சூர்யா உயரத்தை கிண்டல் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் இரு தொகுப்பாளிகளும் பேசும் போது, கே வி ஆனந்த் இயக்கும் படத்தில் சூர்யா 37 படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார் என கூறுகிறார்கள். அனுஷ்கா ஹைட்டுக்கு ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு சூர்யா.

- Advertisement -

ஆனால். இப்போ அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும். இல்லை என்றால் ஒக்காந்து எல்லா ஷாட்டையும் எடுக்கலாம் என்று கிண்டல் செய்தார்கள். இந்த விஷயம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அந்த இரண்டு தொகுப்பாளினிகளும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சன் டிவி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் போராட்டங்களை கூட நடத்தினார்கள்.

அதன் பின்னர் அந்த இரண்டு தொகுப்பாளினிகளும் மன்னிப்பு கேட்டனர், இப்படி ஒரு நிலையில் நடிகை சங்கீதா, சூர்யா குறித்து பேசிய அந்த ஒரு வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மீரா மிதுன், தமிழ்நாட்டில் உண்மையான இந்த இரண்டு சிங்கப்பெண்கள் உண்மையை பேசி இருக்கிறார்கள். உங்கள் இருவரையும் பிடித்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனின் இந்த பதிவிற்கு பேட்டி ஒன்றில் பங்கேற்ற சங்கீதா பதிலளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த பேட்டியில் பேசியுள்ள சங்கீதா அந்தநிகழ்ச்சிக்கு (சூர்யாவை கேலி செய்த நிகழ்க்ச்சி) வெளியான பின்னர் எங்களை சூர்யா ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்தார்கள். ஆனால், அதை நாங்கள் எதுவும் கண்டுக்காமல் விட்டுவிட்டோம். மேலும், சூர்யாவை வேண்டும் என்று நாங்கள் அப்படி பேசவில்லை. ஆனால், மீரா மிதுன் சமூகவலைதளத்தில் வேண்டுமென்றே விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பங்களைப் பற்றி எல்லாம் பேசி வருகிறார் என்று கூறியிருக்கிறார் சங்கீதா. மேலும், வாயில் கெட்ட வார்த்தை வந்து விடும் என்று நேரம் இதனை வெளுத்து வாங்கியிருக்கிறார் சங்கீதா.

Advertisement