இப்போ புரியுதா இந்த புகைப்படத்திற்கு அர்த்தம் – அனிருத்தின் ஹிட் ஆல்பத்தில் நடித்துள்ள மீரா மிதுன். இதோ வீடியோ.

0
1667
anirudh
- Advertisement -

பிக் பாஸ் மீரா மிதுனை பற்றி தெரியாதவங்க யாராவது இருப்பார்களா? அந்த அளவிற்கு தற்போது சமூக வலைதளங்களின் சர்ச்சை நாயகியாக உள்ளார். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் 2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியின் வெற்றியாளர் ஆவார். ஆனால், அந்த வெற்றியை மீண்டும் அவரிடம் இருந்து பரித்து விட்டார்கள் என பல சர்ச்சைகள் எழுந்தது. இது அனைவருக்கும் தெரிந்தே. கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மீரா மிதுன் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யாத அட்டூழியங்களே இல்லை.

-விளம்பரம்-

அதிலும் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் இவரை பற்றி பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. அதே போல மீரா மிதுன் அடிக்கடி சினிமா நடிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் கூட மீரா மிதுன் ராக் ஸ்டார் அனிருத் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில்பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

- Advertisement -

மேலும், அந்த புகைப்படம் ஒரு சக்ஸஸ் பார்ட்டியின் போது எடுத்தது என்றும் அந்த புகைப்படத்தை வெங்கட் பிரபு தான் எடுத்தார் என்றும் பதிவிட்டிருந்தார். இது ஒருபுறம் இருக்க இவர் அனிருத் பாடி இருந்த ஒரு ஆல்பம் பாடலில் கூட சும்மா ஒரு சில பிரேம்களில் தலை காண்பித்தும் இருக்கிறார். அனிருத் படத்திற்கு இசையமைப்பதோடு சில ஆல்பம் பாடல்களை கூட வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் அனிருத் பாடி 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த சான்சே இல்லை என்ற ஆல்பம் பாடலில் வந்து உள்ளார் மீரா மிதுன். தற்போது அந்த புகைப்படமும், பாடலும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அனிருத்தின் இந்த ஆல்பம் பாடலுக்கு பின்னர் தான் மீரா மிதுன், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement