இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறாரா மீரா ? வீடீயோவை நீங்களே பாருங்க.

0
1326
meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர்தான் நடிகையும் மாடல் அழகியுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்று இருந்தார். ஆனால், அழகி பட்டத்தை வைத்துக்கொண்டு இவர் செய்த பல்வேறு மோசடி செயல்களால் அவரிடமிருந்து அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகவும் சர்ச்சையான ஒரு நபராக இருந்து வந்தார் மீரா மிதுன். மேலும் இவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் திடீரென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மீராமிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் மீராவின் சர்ச்சை குறையவில்லை. அடிக்கடி அரை நிர்வாண புகைப்படங்களையும் ஆண் நண்பருடன் மோசமாக ஆடிய வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் மீராமிதுன் மணப்பெண் போல அலங்கரித்துக்கொண்டு ஒரு வீடீயோவை பதிவிட்டார். மேலும், அந்த வீடியோவில் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்றும் கூறி இருக்கிறார்.

மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஒரு எபிசோடில், கணவர் குறித்து சொல்ல வேண்டும் என்று டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அப்போது தனது கணவர் குறித்து பேசிய மீரா மிதுன், ஐந்து வருடத்திற்கு முன்னர் என்னுடைய அப்பா எனக்கு ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அனால், திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து தான் அவன் ஒரு சைக்கோ என்று தெரிந்தது. இப்படி ஒருவரை எனக்கு திருமணம் செய்துவிட்டோமே என்று அப்பா மிகவும் சங்கடமடைந்தார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement