தற்போது தமிழ் நாட்டில் பல பிரச்சனை சென்று கொண்டு இருந்தாலும் ஒரு பக்கம் மீரா மிதுன் பிரச்சனை சென்று கொண்டு தான் இருக்கிறது. மீரா மிதுனுக்கு அறிமுகம் தேவையா என்ன ? விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மீராமிதுன். ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி முன்னதாகவே அழகிப் போட்டியில் நடத்துவதாக கூறி பித்தலாட்டத்தை ஈடுபட்டதாக இவர் மீது பல்வேறு வழங்கப்படும் பதிந்துள்ளது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த சர்ச்சைகள் கொஞ்ச நஞ்சம் கிடையாது.
https://twitter.com/meera_mitun/status/1300678492548259840
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியே வந்த பின்னரும் பல்வேறு போட்டிகள் குறித்து பல சர்ச்சையான விஷயங்களை கூறி வந்தார்எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதே போல பல்வேறு பிரபலங்களை வம்பிழுத்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொள்ள முயற்சித்தும் வருகிறார்.
மீரா மிதுன் ஒரு சில படங்களில் தலைகாண்பித்து உள்ளார். அதில் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படமும் ஒன்று. இந்த படத்தில் நடிகர் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டதர்க்கு காரணம் சூர்யா தான் என்று குற்றம் சாட்டி இருந்தார் மீரா மிதுன். இதனால் அடிக்கடி சூர்யா குறித்து அவதூறாக பேசி வருகிறார்.
https://twitter.com/Surya_Raja_offl/status/1300679245539110913
இதனால் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை கழுவி ஊற்றி வருகின்றனர்.அன்ஹா வகையில் சூர்யாவின் ரசிகர் ஒருவர், மீரா மிதுனை மோசமாக திட்டி தீர்த்து இருந்தார். அதற்கு பதில் அளித்த மீரா மிதுன், சூர்யா உங்கள் மனைவி ஜோதிகாவிடம் இதற்கான அர்த்தத்தை கேட்டு சொல்ல முடியுமா ராஜா அவர்களே நீங்களும் இதை பற்றி சூரியாவிடம் கேட்டு சொல்ல முடியுமா என்று கூறியிருக்கிறார் மீரா மிதுன்.





