Sc எல்லாரும் கிரிமினல், சினிமாவில் இருக்கும் எல்லா Sc-யையும் வெளியில் அனுப்ப வேண்டும் - மீரா மிதுனின் திமிர் பேச்சு.

By Rajkumar · 6/8/2021

சமூக வலைதளத்தில் கடந்த சில வாரமாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்கள்.

https://twitter.com/madesh_pachi/status/1370769968321662987

இப்படி ஒரு நிலையில்தான் பிக்பாஸில் கலந்து கொண்டார் மீராமிதுன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சை போட்டியாளராக திகழ்ந்து வந்த மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்தார். அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கோலிவுட் மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா.

இதையும் பாருங்க : நகுல் மனைவியின் தாய்ப்பால் கொடுக்கும் போட்டோ ஷூட் - படு குயூட் புகைப்படம் இதோ.

பின்னர் இதற்கெல்லாம் காரணம் அப்சரா ரெட்டி என்ற திருநங்கை தான் என்றும் அதனால் சூர்யா மற்றும் விஜய் தன்னை மன்னிக்க வேண்டும் என்று கூறி இருந்தார் மீரா. அதே போல தமிழில் இருக்கும் பல நடிகைகள் தன்னுடைய முகத்தை தான் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறி வந்த மீரா மிதுன் சமீபத்தில் பின்னணி பாடகி தீ குறித்தும் அவதூறாக பேசி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=FcE6IAekihA

தீயின் என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியான போது, என்னுடைய பாடல் வெளியான பின்னர் அனைவரும் பாடலை வெளியிடுகிறார்கள். உங்கள் பாடல் வெளியீட்டிற்கு என் பாடல் பெயரை பயன்படுத்துவதை நிறுத்துஙகள். யாரை சொல்றேன்னு புரிஞ்சதா. வீடியோ போட்டு அசிங்க பட்றதுக்கு முன்னாடி ஒழுங்கமா நடந்துக்கோங்க பற புத்தி என்று கூறி இருந்தார்.

https://twitter.com/RazzmatazzJoe/status/1423524681181581312

அதே போல , நயன்தாரா, பிரியா ஆனந்த் போல பாடகி தீயும் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாக கூறி இருந்தார் மீரா மீதும். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன், சந்தோஷ் நாராயணன் உங்க பொண்ணு ஏன் என் மூஞ்ச யூஸ் பண்றங்க, அவரோட ஒரிஜினல் மூஞ்சி எல்லாருக்கும் தெரியும். உங்க ஒரிஜினல் மூஞ்ச காட்ட அவ்ளோ அசிங்கமா இருக்கா என்று கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=Av9rddc54AY

இப்படி ஒரு நிலையில் மீராமிதுன் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறார், தீ தன்னுடைய முகத்தை காபி செய்கிறார் என்றும், தமிழ் சினிமாவில் எஸ்சி இனத்தை சார்ந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை துரத்த வேண்டும் என்று மீரா மிதுன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் எஸ் சி இனத்தில் இருப்பவர்கள் அனைவரும் தவறான வழியில் செல்வதால் தான் உங்களை எல்லாம் அப்படி பார்க்கிறார்கள் என்றும் மீராமிதுன் பேசியிருக்கிறார். இவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது மேலும் இவரை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலரும் கூறி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full