பாலிவுட் பட வாய்ப்பிற்காக மீரா மிதுன் செய்த கொரலி வித்த – வீடியோ வெளியிட்ட ஜோ மைக்கேல். இவருகிட்ட பல சரக்கு இருக்கு போல.

0
3828
- Advertisement -

கடந்த சில நாட்களாக மீரா மிதுன் தான் சமூக வளைத்ததில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். மீரா மிதுன் குறித்து நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நாடங்கங்கள் அனைத்தையும் நான் பார்த்தோம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இவர் மீது போலீசில் பலர் புகார்களை கூட கொடுத்திருந்தனர்.

-விளம்பரம்-

மேலும், மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும், அடிக்கடி பல பேட்டிகளில் பங்கேற்ற ஜோ மைக்கேல் மீரா மிதுன் குறித்து இழிவாகவும், பெண்களை தரை குறைவாக பேசியதால் பெண்கள் அமைப்பினர் சார்பில் ஜோ மைக்கேல் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அடையார் போலீஸ் நிலையத்திற்கு ஜோ மைக்கேல் ஆஜராக வேண்டும் என்று இரண்டு மூன்று முறை சம்மன் அனுப்பபட்டுள்ளது.

- Advertisement -

ஆனால், ஜோ மைக்கேல் ஆஜர் ஆகாததால் அவரை விசாரணைக்கு அழைக்க பெண் போலீசார் சில சென்ற போது அவர்களை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் ஜோ மைக்கலை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தற்போது வெளியில் வந்துள்ள ஜோ மைக்கேல் மீரா மிதுனின் ஆட்டத்தை பொறுக்க முடியாமல் மீரா மிதுன் குறித்து தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.

அந்த வகையில் மீரா மிதுனின் பழைய புகைப்படங்கள் விடியோக்கள் என்று பதிவிட்டு வரும் ஜோ மைக்கேல் இந்தி திரைப்படத்தில் வாய்ப்பை பிடிப்பதற்காக மீரா மிதுன் ஹிந்தியில் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜோ மைக்கேல். மேலும், மீரா மிதுன் குறித்து 1872 வீடியோ இருப்பதாக கூறியுள்ளார் ஜோ மைக்கேல். எனவே, ஒழுங்கு மரியாதையாக விஜய் மற்றும் சூர்யா இருவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டு ஓடிவிடு என்றும் எச்சரிக்கை கொடுத்துள்ளார் ஜோ.

-விளம்பரம்-
Advertisement