என் மூஞ்சிய பாக்கவே புடிக்கல, தற்கொலை பண்ணிக்க போறேன் - நீண்ட நாட்களுக்கு பின் கதறி அழுது மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ.

By Rajkumar · 13/2/2021

சமூக வலைதளத்தில் கடந்த சில வாரமாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=3BiE9LYyYjw

இப்படி ஒரு நிலையில்தான் பிக்பாஸில் கலந்து கொண்டார் மீராமிதுன். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று இவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும்இவர் டுவிட்டரில் அடிக்கடி சரியான விஷயங்களை பதிவிட்டு வந்தார். அதிலும் கடந்த சில வாரமாக ஹோலிவுட்டு மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா.

இதையும் பாருங்க : ஆபாச படம் மூலம் இதுவரை மியா கலீபா சம்பாதிச்சது இவ்வளவு பணம் தான் - லெபனான் நாட்டின் சில்க் போல இவங்க கதை.

இப்படி ஒரு நிலையில் மீரா மிதுன் இறந்துவிட்டார் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று போடப்பட்டிருந்தது. இந்த ட்வீட்டை மீராமிதுன் போட்டாரா இல்லை வேறு யாராவது மீராமிதுன் கணக்கை ஹேக் செய்து இந்த பதிவை போட்டார்களா என்பது தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் பலரும் மற்ற சர்ச்சை போலவே இந்த ட்விட்டையும் போட்டு மீராமிதுன் பிரபலத்தை ஏற்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள் என்று கமன்ட் செய்து வந்தார்கள். .

https://twitter.com/meera_mitun/status/1360467185492131843

ஆனால், தன்னுடைய அக்கவுட் ஹேக் செய்யப்பட்டுவிட்டது, தான் ஒரு தைரியமான பெண், தற்கொலை எல்லாம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறி இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக டிவிட்டரில் எந்த பதிவையும் போடாமல் இருந்த மீரா, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கமுடியவில்லை என்றும் தான் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் கூறி கண்ணீர் மல்க கதறியுள்ளார் மீரா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full