ஆபாச படம் மூலம் இதுவரை மியா கலீபா சம்பாதிச்சது இவ்வளவு பணம் தான் – லெபனான் நாட்டின் சில்க் போல இவங்க கதை.

0
7770
miya

ஹாலிவுட்டில் இருந்து எத்தனையோ ஆபாச நடிகைகள் உலக அளவில் பிரபலமடைந்தார்கள். அந்த வகையில் உலகளவில் அறியப்பட்ட ஆபாச நடிகைகள் என்றால் அது சன்னி லியோன் மற்றும் மியா ஆபாச நடிகையாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன். தற்போது திருமணம் செய்து கொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு அடுத்து பார்ன் வலைத்தளத்தில் அதிகம் பிரபலமடைந்தவர் நடிகை மியா காலிஃபா தான். என்னதான் ஆபாச நடிகையாக இருந்தாலும் கடந்த ஆண்டு தனது லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு தன்னுடைய கண்ணாடியை ஏலம் விட்டு உதவி செய்தது முதல் சமீபத்தில் இந்திய விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்தது வரை மியா கலீபா சில சமூக பொறுப்புகளையும் கொண்டுள்ளார்.

Mia Khalifa

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மியா கலிபா, நான் பார்ன் குறும்படங்களில் நடிப்பதை நிறுத்தி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை ரேங்கிங்கில் இருக்கிறேன். இத்தனை புகழைச் சுமந்து ஆபாசப் பட உலகின் லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தும் இதுவரை பார்ன் ஃபிலிம்களில் நடித்து மொத்தம் 12,000 டாலர்கள் மட்டுமே வருவாய் ஈட்டியிருக்கிறார் மியா. இது ரொம்ப பெரிய அமௌன்ட் என்று நினைக்க வேண்டாம். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 8.5 லட்சம் மட்டுமே. இதுகுறித்து மேலும் பேசிய அவர், அந்தத் துறையில் பெண்களைச் சட்டபூர்வமாக ஒப்பந்தம்செய்து சிக்கவைப்பார்கள். ஒவ்வொருவரின் பொருளாதாரத் தேவையை அறிந்துகொண்டு இப்படிப்பட்ட குறைவான சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள்.

- Advertisement -

நான் ஒன்றும் பார்ன் ஸ்டாராக இருந்து புகழ்பெற்றதற்காக பெருமைகொள்ளவில்லை. பொருளாதார நிலை அப்படியாக்கிவிட்டது. முதன்முதலாக ஆபாசப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமானபோது என் நண்பர்கள் யாருக்கும் அது தெரிந்துவிடக் கூடாது என்ற பதற்றத்திலேயே நடித்தேன். ஆனால், என் நண்பர்கள் என்னுடைய வீடியோவைப் பார்த்துவிட்டனர். தங்களுக்குள் அதை ஃபார்வேர்டும் செய்துகொண்டனர். அந்தச் சமயத்தில்தான் அடுத்த வீடியோ வெளியானது.

This image has an empty alt attribute; its file name is 1-41-611x1024.jpg

இதுவரை வெளியான என் வீடியோக்களிலேயே மிகவும் வைரலான, நான் புர்க்காவில் தோன்றிய வீடியோ தான். அந்த வீடியோ வெளியான போது தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் சில என்னை அச்சுறுத்த ஆரம்பித்தது. இந்த வீடியோ வெளியான போது என் தலையைத் தனியாக வெட்டியதுபோல் போட்டோஷாப் செய்யப்பட்ட ஒரு படத்தை எனக்கு அனுப்பி, ‘அடுத்து நீதான்’ எனக் கொலை மிரட்டல் விடுத்தனர்,என்னுடைய வீட்டை கூகுள் மேப்பில் குறிப்பிட்ட ஒரு ஸ்கிரீன்ஷாட்டையும் அந்தப் படத்துடன் அனுப்பியதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கினேன் என்று கூறியுள்ளார் மியா.

-விளம்பரம்-

இப்போதெல்லாம் யாராவது என்னை ட்ரோல் செய்தாலோ, கொச்சைபடுத்தினாலோ, என் அடுத்த கேள்வி நீங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸா? என்பதுதான். அவர்களையே பார்த்துவிட்டேன். நீயெல்லாம் எம்மாத்திரம் என்று கடந்து விடுவேன். என் அடல்ட் படங்களைப் பார்த்து என்னை ரசித்தவர்களால், கடந்தகாலத்தில், ஏற்றுக்கொள்ளல், பெருமை என்ற இரண்டுமே என் வாழ்வில் இருந்தன. ஆனால், இன்று அவையிரண்டுமே இல்லை. கெட்ட பெயர் மட்டுமே இருக்கிறது. என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தற்போது என் நோக்கமாக இருக்கிறது. அதற்காகவே நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். மற்றபடி பெருமை எனக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார் மியா.

Advertisement