குளியல் அறை வீடியோவை வெளியிட்ட மீரா. கண்ட மேனிக்கு கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
14163
meera-mithun
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

-விளம்பரம்-

2016 ஆம் ஆண்டு மாடல் அழகியான இவர் அழகி பட்டத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக இவரிடம் இருந்து அழகி பட்டம் பறிக்கப்பட்டது. மேலும், இவர் அழகிப் போட்டிகளை நடத்துவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த து இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே இவர் சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னரும் சேரன் மீது வைத்த பொய்யான குற்றச்சாட்டு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் போட்டியாளர்கள் குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசி வருகிறார் மீரா மிதுன். அதேபோல மீராமிதுன் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். திரைப்படத்தில் எப்படியாவது ஒரு நடிகையாக வலம் வர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒருசில படங்களில் கமிட்டாகி இருந்தார். ஆனால், இவரது நடத்தையை கண்டு அந்தப் படங்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர்களையும் திட்டி தீர்த்து சமூகத்தில் பதிவிட்டிருந்தார்.

இப்படி சர்ச்சைக்கு சற்றும் குறையாமல் இருக்கும் மீரா மிதுன் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் சர்ச்சையான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் குளியல் அறையில் நீண்ட குளியலை மேற்கொண்டதாக ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். ஆனால், குளித்துவிட்டு வந்தாலும் எப்படி லிப் ஸ்டிக் அப்படியே இருகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல இந்த விடியோவை கண்ட பலரும் வழக்கம் போல மீரா மிதுனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement