இந்த போஸ்டருக்கு விஜய் விரைவில் மன்னிப்பு கேப்பாரு – சர்ச்சை நடிகை போட்ட ட்வீட்.

0
826
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா-சினேகா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இளையதளபதி விஜய்யின் காதல் திருமணம் சற்று வித்தியாசமானது தான். கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா.

-விளம்பரம்-

மேலும்,இவர்களுக்கு திருமணம் ஆகி 21 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள்.தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள்.

- Advertisement -

கடந்த ஆகஸ்ட் 25 விஜய்யின் திருமணநாளையொட்டி மதுரையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை முழுவதும் போஸ்டர் ஒன்றுஒட்டப்பட்டிருந்தது . அதில் மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவியே என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சி தலைவரே என நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் இந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சர்ச்சை நாயகி மீரா மிதுன், தலைவா பட பிரச்சனையின் போது மன்னிப்பு கேட்ட விஜய்யின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, விரைவில் இந்த போஸ்டருக்காக இது நடக்கும் குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement