ரஜினி(கன்னடர்), விஜய் (கிருஸ்துவர்). இவங்க ரெண்டு பெரும் மீதும் வழக்கு தொடரப்போறேன் – மீரா மிதுன் கொடுத்த ஷாக்.

0
2802
rajinivijay

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.2016 ஆம் ஆண்டு மாடல் அழகியான இவர் அழகி பட்டத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக இவரிடம் இருந்து அழகி பட்டம் பறிக்கப்பட்டது. மேலும், இவர் அழகிப் போட்டிகளை நடத்துவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த.து இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே இவர் சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார்.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னரும் சேரன் மீது வைத்த பொய்யான குற்றச்சாட்டு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி மற்றும் விஜய் குறித்து சமீபத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அதில், தமிழ்நாடு செத்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். நான் மிகவும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ரஜினிகாந்த் (கன்னடர்) விஜய் (கிறிஸ்துவர்) இவர்கள் இருவரும் என்னுடைய புகழை கெடுக்க பார்க்கிறார்களா ? இவர்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நான் தயங்க மாட்டேன். கடவுள் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement