சீன் சொல்லிக்கொண்டு இருக்கும் போது சிகரெட் பிடித்த மீரா மிதுன் - கடுப்பான Kpy கோதண்டம்.

By Rajkumar · 9/8/2021

சமூக வலைத்தளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு பேர்வழியாக இருந்து வருபவர் மாடல் அழகியும் நடிகையுமான மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவர் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மிகவும் மோசமாக விமர்சித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் இதனால் இவர் மீது பல்வேறு நபர்களும் புகார் அளித்து இருக்கின்றனர் மேலும் இவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=xR8RugN-vDw&t=5s

பொதுவாக மீராமிதுன் எங்கு சென்றாலும் அங்கு ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்து விடும் அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சிகரெட் பிடித்து இயக்குனர்களில் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் மீரா மிதுன். தற்போது மீரா மிதுன் பேய காணோம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இந்தப் படத்தின் இயக்குனர் மீரா மீதுனிற்கும் காட்சியை விளக்குவதற்காக அழைத்துள்ளார்.

இதையும் பாருங்க : Twins மகள்கள் - பிரசவத்தின் போது எடுத்த வீடியோவை பகிர்ந்த நடிகை சந்தோஷி.

அப்போது KPY கோதண்டமும் அங்கு இருந்திருக்கிறார். இயக்குனர் காட்சியை விவரித்துக் கொண்டு இருக்கும்போதே தனது கையில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து புகையை விட்டுள்ளார் மீரா மிதுன்.இதனால் இயக்குனர் தர்மசங்கடத்திற்கு ஆளாகிய எதற்காக தற்போது சிகரெட் பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நீங்கள் எல்லாம் என்ன கற்காலத்தில் இருக்கிறீர்கள் எனக்கு டென்ஷன் ஆக இருக்கிறது அதனால் சிகரெட் பிடிப்பேன் என்று மீராமிதுன் கூறுகிறார்.

அதற்கு இயக்குனரோ நீங்கள் சிகரெட் பிடிப்பது எனக்கு கவலை கிடையாது தனியாக இருக்கும்போது பிடித்துக்கொள்ளுங்கள் தற்போது சீன் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன் நீங்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வாதிட்டார்.பின்னர் அருகில் இருந்த கோதண்டம் மீராமிதுன் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதற்கு மீராமிதுன் நீங்களெல்லாம் சிகரெட் பிடிப்பது கிடையாது என்று கோபத்தையும் கேட்டார் அதற்கு அவரோ நான் பிடிப்பேன் ஆனால் தனியாக சென்று தான் பிடிப்பேன் இப்படி ஸ்பாட்டில் சிகரெட் பிடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full